சூதாட்டம் மூலம் பெருமள­வில் சம்பாதிக்க வழி கண்டுபிடித்த காஜல் அகர்வால்

சூதாட்டம் மூலம் பெருமள­வில் சம்பாதிக்க வழி கண்டுபிடித்த காஜல் அகர்வால்

1 mins read
422ac64a-34ed-4026-b9ad-4cfa6381a0e5
-

சினிமா தவிர விளம்பரப்­ படங்­க­ளில் நடித்து நடிகைகள் கோடி­களைச்­ சம்பாதிக்­கின்ற­னர். சமந்தா, காஜல் அகர்வால் இரு­வருக்­கிடை­யில்­தான் தற்போது விளம்பர படங்­க­ளில் நடிக்­கும் போட்டி நடக்­கிறது. காஜல் நடித்து வந்த 'டூத்­ பேஸ்ட்' விளம்ப­ரத்தை சமந்தா கைப்பற்றி­னார். பாலிவுட் நாயகிகள் பெரும் பணக்காரர்க­ளின் திருமண நிகழ்ச்­சி­க­ளில் பங்கேற்பதற்­கும் நடனம் ஆடுவதற்­கும் கோடிக்கணக்­கில் பணத்தை அள்ளி வரு­கின்ற­னர்.

சூதாட்டக்­ கூடத்­திற்­கும் நடிகைகள் வருவதற்கு காசு கொடுக்­கும் செய்தி தற்போது வெளியாகி உள்­ளது. இலங்கை­யில் புகழ்பெற்ற சூதாட்டக்­ கூடம் உள்­ளது. இந்த இடத்­திற்கு வரும் பணக்கார வாடிக்கையாளர்­க­ளு­டன் காஜல் அகர்வால் கலந்­து­ரையாடுவதற்கு கோடிக்கணக்­கில் கொடு­க்­கப்பட்டிருக்­கிறது. இது மிக­வும் எளி­தான வரு­மானமாக இருப்பதாக நடிகைகள் முடி­வெடுத்து இருக்­கி­றார்கள்.