பி.டி.உஷாவாக கத்ரீனா கைப்

பி.டி.உஷாவாக கத்ரீனா கைப்

2 mins read
290a4525-82ab-4007-ac6a-aaa5d60c9d30
-

தடகள போட்டி­க­ளில் பல்வேறு சாதனை­களைப்­ படைத்த பி.டி.உஷா­வின் வாழ்க்கை­யைத் திரைப்படமாக உருவாக்­கும் பணி­க­ளில் இயக்­குநர் ரேவதி வர்மா ஈடுபட்டுள்ள நிலை­யில் அந்த கதா­பாத்­தி­ரத்­தில் கத்ரீனா கைஃப்­ நடிக்க இருக்­கி­றார்.

பாலிவுட்­டின் முன்னணி நடிகையாக இருந்த கத்ரீனா கைஃப்­ அண்மைக்காலமாக அந்த இடத்தைத்­ தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ஆலியா பாட் போன்ற நடிகைக­ளின் வசம் செல்ல விட்டுவிட்­டார்.

மீண்­டும் பாலிவுட்­டின் முன்னணி நடிகை அந்தஸ்தைப்­ பிடிக்க போராடி வருகி­றார் கத்ரீனா கைஃப். ஆமீர்­கானு­டன் அவர் நடித்த 'தக்ஸ் ஆஃப்­ இந்தோஸ்­தான்', ஷாரூக்­கானு­டன் நடித்த 'ஜீரோ' படங்கள் படுதோல்வி யடைந்­து­ள்­ளன.

இந்நிலை­யில், வரும் ஈகைத்­ திருநா­ளில் வெளியா­கும் சல்­மான் கானின் 'பாரத்' படத்தை பெரி­தும் நம்பியுள்­ளார். அந்தப்­ பட­மும் தன்னை ஏமாற்றினால் என்ன செய்வது என்ற குழப்­பத்­தில் இருந்­தார் கத்ரீனா கைஃப்.

இந்நிலை­யில் இயக்­குநர் ரேவதி வர்மா பி.டி.உஷா­வின் வாழ்க்கை வரலாற்று படத்தை இய­க்­கப்போவதாக அறிவித்து இருந்­தார்.

அந்தப்­ படத்­தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாக முத­லில் கூறப்பட்டது. பிரியங்கா ஏற்கெனவே குத்­துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றுப்­ படத்­தில் நடித்­திருந்­தார். அந்தப்­ படத்தைப்­ பார்த்த பிறகு தன் மனநிலையை மாற்றிக்­கொண்டு கத்ரீனாவிடம் தன்னுடைய படத்­தில் நடிக்க கேட்டிருக்­கி­றார் இயக்­குநர்.

இது தனக்­குக்­ கிடைத்த வாய்ப்பாக நினைத்து உடனே கத்ரீனா நடிக்க ஒப்­புக்­கொண்டு விட்­டார். தற்போது மற்ற­வர்க­ளின் வாழ்க்கை வரலாற்று படத்­தில் நடிகைகள் நடித்து நல்ல பெயர் எடுத்து ­வருவதால் தானும் பி.டி.உஷாவாக நடித்து விட்ட முன்னணி இடத்தை மீண்­டும் பிடிக்க முடி­வெடுத்து உடற்பயிற்சி செய்வ­தில் மும்முரமாக இறங்கி இருக்­கி­றார் கத்ரீனா கைஃப்.