இந்தோனிசியா­வில் 'காப்­பான்' குழு

இந்தோனிசியா­வில் 'காப்­பான்' குழு

2 mins read
7ca8c30f-eb4a-4fc0-b007-fc63e9f6567b
-

ரூ.1000 கோடி­யில் திட்டமிடப்பட்ட 'மகாபாரதம்' படத்தைக்­ கைவிட்டுவிட்டதாக தயாரிப்பாளர் ரகுராம் ஷெட்டி தெரிவித்­துள்­ளார்.

பீம­னின் பார்வையிலிருந்து மகாபா­ரத்தை 'ரண்டமூழம்' என்ற தலைப்­பில் நாவலாக எழுதிய­வர் எம்.டி.வாசுதே­வன் நாயர். இந்த நாவல் பல்வேறு விருது­களை வென்றது மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளி­லும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

இந்த நாவலை மையமாக வைத்து வி.ஏ.ஸ்ரீகு­மார் மேனன் படமாக இயக்க முடிவு செய்­தார். இத­னைச் சுமார் 1,000 கோடி ரூபாய் பொருட்செல­வில் தொழில் அதிபர் ரகுராம் ஷெட்டி தயாரிக்கவுள்ளதாக அறிவி­க்­கப்பட்டது. இதில் நாயகனாக நடிக்க மோகன்லால் ஒப்பந்த­மானார். தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளிலிருந்து முன்னணி நடிகர்கள் பலர் நடிக்க பேசப்பட்டிருந்­தது.

இந்தியா­வில் அதிக பொருட்செல­வில் தயாரி­க்­கப்­படும் படம் என்ற சாதனை மட்டுமல்­லாது, ஹாலிவுட் படங்­களைத்­ தவிர்த்து அதிக பொருட்செல­வில் தயாரி­க்­கப்­படும் படம் என்ற சாதனையை­யும் நிகழ்த்­தியது. இதன் பணிகள் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டு பாகங்­க­ளில் முதல் பாகம் 2020இல் வெளியா­கும் என்­றும் அறிவித்­தனர்.

தற்போது இப்படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர் ரகுராம் ஷெட்டி அறிவித்­துள்­ளார். இதற்கு கதையாசிரி­யர் எம்.டி.வாசுதே­வன் நாயருக்­கும் இயக்­குநர் வி.ஏ.ஸ்ரீகு­மார் மேன­னுக்­கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படம் நின்றுவிட்டது என்று தெரிவித்­துள்­ளார்.

மே­லும், "நான் இன்­னும் நல்ல கதாசிரி­யருக்காகக்­ காத்­திருக்­கி­றேன். கண்­டிப்பாக எடுப்­பேன். அதற்­கான ஈடுபாடு என்னிடம் உள்­ளது. ஓர் உண்மை­யான இந்தியனாக, நமது வரலாற்றை உல­கம் முழுவ­தும் அனைத்து மொழிகளி­லும் எடுத்­துச்­ செல்ல நான் இந்தப்­ படத்தை எடுக்­கி­றேன்," என்­றும் குறிப்­பிட்டுள்­ளார் ரகுராம் ஷெளட்டி. படம் கைவிடப்பட்­டதைக்­ கேள்விப்பட்ட மோகன்லால் ரசிகர்க­ளின் வருத்­தத்­தில் ஆழ்ந்­து­ள்­ளனர்.