சுடச் சுடச் செய்திகள்

விஜய் சேதுபதியாக விரும்­பும் பிரபலங்கள் 

விஜய் சேதுபதி, சமந்தா, பஹத்­ பாசில், மிஸ்­கின், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்து அண்மை­யில் திரைக்கு வந்த படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப்­ படத்தைத்­ தியாகராஜன் குமாரராஜா இயக்கி இருந்­தார்.  

இந்தப்­ படத்­திற்கு ரசிகர்கள் மத்தி­யில் வரவேற்பு கிடைத்­தது. இதில் முன்னணி நடிகர்கள் நடிக்க விரும்பாத வேடத்­தில் ‘இமேஜ்’ பார்க்காமல் விஜய் சேதுபதி நடித்து இருந்த திருநங்கை வேடம் பேசப்பட்டது. 

க­வர்ச்சி காட்சிகள் அதி­கம் இருந்ததாக விமர்சனங்­க­ளும் வந்­தன. இந்தப்­ படத்தை பிரபல இந்தி இயக்­குநர்கள் அனுராக்­ காஷ்யப், விக்ரமா­தித்யா மோட்­வானி உள்பட பலர் பார்த்­துப்­ பாராட்டி இருக்­கி­றார்கள்.

விஜய் சேதுபதி நடித்­திருந்த திருநங்கை வேடத்­தில் நடிக்க பாலிவுட் முன்னணி நடிகர்கள் பல­ரும் விருப்பம் தெரிவித்து இருக்­கி­றார்கள். 

விஜய் சேதுபதி நடித்த வேடம் பலரை­யும் கவர்ந்திருப்பதால் தமிழ்ப்­ படத்தை அப்படியே இந்தி­யில் மொழி பெயர்த்து வெளியிட­வும் பல தயாரிப்பாளர்கள் இயக்­குநர் குமார ராஜாவிடம் பேசி வரு­கின்ற­னர்.

இந்நிலை­யில் மதுரை­யில் கடைத்­திறப்பு விழா ஒன்றுக்­குச்­ சென்ற விஜய் சேதுபதியிடம், யார் அரசியலுக்கு வரவேண்­டும் என்று கேட்டதற்கு, “யாருக்கு அறி­வும், மக்­க­ளுக்­குச்­ சேவை செய்­யும் மன பக்­குவ­மும் உள்ளதோ அவர்கள் அரசியலுக்கு வரலாம். தேர்த­லின் போது பல ஆண்டு­க­ளாக பணம் வாங்கிக்­ கொண்டு வாக்களிக்­கி­றார்கள். அது தவ­றான செயல்.

ம­க்­கள் அனை­வரும் வாக்களிக்க வேண்­டும், வாக்களிப்பது நமது கடமை. வாக்கு போடுவது குறித்து மக்­க­ளுக்கு விழிப்­புணர்வு ஏற்­படுத்த பல நடிகர்கள் முன்வந்­தனர். அதில் நானும் ஒரு­வன். தயவுசெய்து பணம் வாங்கிக்­கொண்டு வாக்களிக்காதீர்கள்,” என்று பதிலளித்­ தார். 

நீங்கள் அரசியலுக்கு ­வருவீர் களா என்று கேட்டதற்கு, “அறிவாந்த வர்கள் மட்­டும் அரசியலுக்கு வரவேண்­டும். என்னிடம்  இது குறித்துக்­ கேட்க வேண்­டாம். அணில் சேமியா விளம்ப­ரத்­தில் கிடைத்த ஊதி­யத்­தில் நான் எந்தக்­ கிரா­மத்தை­யும் தத்­தெடுக்க வில்லை. அது முற்றி­லும் தவ­றான செய்தி. 

“சமூக வலைத்தளங்­க­ளில் தவ­றான செய்திகள் மிக விரைவாக பரவுவதைத்­ தடுத்­துப்­ பாதுகாப்பாக கையாளவேண்­டும். சாதி மாற்றி­ திருமணம் செய்தோர் மகிழ்ந்து வாழும் வாழ்வியலை யாரும் விளம்பரம் செய்யாத நிலை­யில், ‘டிக்டாக்’ போன்றவற்றிற்குத்­ தடை விதிப்பது குறித்து விளக்­கம் கூற இயலாது,” என்று பேசி அனைவ­ரின் கைத்­ தட்டலை­யும் பெற்­றார் மக்­கள் செல்­வன் விஜய் சேதுபதி.

மதுரை­யில் தேர்தல் நடக்க இருக்­கும் நேரத்­தில் விஜய் சேதுபதி வாக்கு போடுவது பற்றி­ பேசியது மக்­கள் அனை­வரை­யும் சிந்திக்க வைத்­திருக்­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon