காதலனின் அறிவுரைப்படி செயல்படும் ரெஜினா

காதலனின் அறிவுரைப்படி செயல்படும் ரெஜினா

1 mins read
231286d0-8295-4412-9d20-e08a732eb4b7
-

காதலனின் அன்பு வளையத்தில் சிக்கியிருக்கிறாராம் ரெஜினா. தினமும் ரெஜினாவுக்கு தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்புகிறார் அவர் காதலர். அவர் தரும் ஆலோசனைகளை படப்பிடிப்புத் தளத்தில் கடைப்பிடிக்கிறார் நடிகை. தன்னுடன் இணைந்து நடிக்கும் நாயகர்களிடமிருந்து சற்று விலகியே நட்புக் கொண்டாடுகிறார்.

மேலும் காதலனை அடிக்கடி படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைக் கிறாராம். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனும் நடிகருமான சாய் தரம் தேஜுதான் இவருடைய காதலர் என்று கூறப்படுகிறது. 'பிள்ளா நுவ்வு லேனி ஜீவிதம்' படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த உறவு நட்பில் மட்டுமே முடியுமா அல்லது திருமணம் வரை நீடிக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது கோலிவுட்.