சுடச் சுடச் செய்திகள்

தெலுங்கு கற்கும் இந்தி நாயகி

 

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் நாயகிகளில் ஒருவரான அலியா பட் தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் தெலுங்கு கற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா இருவரும் நாயகர்களாக நடிக்க சுதந்திரப் போராட்ட காலத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான கற்பனைக் கதையே ‘ஆர்.ஆர்.ஆர்.’ 

பாகுபலியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி மீண்டும் பிரம்மாண்டமான ஒரு படைப்பைக் கையிலெடுத்துள்ளார். கோமரம் பீம், அல்லூரி சீதராம ராஜு என்ற ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையைச் சொல்லும் படமாக ‘ஆர்.ஆர்.ஆர்.’  பட் நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகவே தெலுங்கு மொழியைக் கற்றுக் கொள்ள ஆசிரியரை நியமித்துள்ளார்.

மேலும் இது பற்றி பேசுகையில், “தெலுங்கு கற்றுக்கொள்ள கடினமான மொழி. ஆனால் மிகவும் உணர்வுப்பூர்வமான மொழி. அந்த மொழியின் நுணுக்கங்களை நான் புரிந்து கொள்ளவேண்டும். சொற்கள் உச்சரிக்கப்படும் விதம், அதற்கு என்ன அர்த்தம் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் எனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை என்னால் வெளிக்கொண்டு வர முடியும்,” என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஹைதராபாத் படப்பிடிப்பைத் தொடர்ந்து, புனேவில் முக்கியமான காட்சிகளைப் படமாக்க முடிவு செய்தனர். இதன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முதல்நாள், ராம் சரணுக்குக் காயம் ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. புனேவில் படப்பிடிப்பிற்காக நடிகர்களிடம் வாங்கப்பட்ட தேதிகள் அனைத்துமே வீணானது. இந்தப் பின்னடைவைச் சமாளிக்க ஜூனியர் என்.டி.ஆர். சம்பந்தப்பட்டக் காட்சிகளைப் படமாக்கத் தொடங்கினார் இயக்குநர் ராஜமௌலி.

தற்போது ஜூனியர் என்.டி.ஆருக்கு கை மணிக்கட்டில் அடிபட்டுள்ளது. படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹாலிவுட் நாயகி டெய்சி விலகி விட்டார். இந்தப் பின்னடைவுகளைத் தாண்டி படப்பிடிப்பு மீண்டும் மே மாதத்தில் தொடங்கலாம் என்று கூறுகின் றனர் படக்குழுவினர்.

கிட்டத்தட்ட ரூ. 350 கோடி முதல் ரூ. 400 கோடி வரை படத்தின் வரவுசெலவுத் திட்டம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து முக்கிய மொழிகளிலும் உருவாகும் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon