‘நல்ல உணவுப் பழக்கம் மிகவும் அவசியம்’

உணவு விஷயத்தில் இளையர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் இளம் நாயகன் ஹரிஷ் கல்யாண்.

பல்வேறு வகை உணவுகளை விரும்பிச் சாப்பிட்டாலும், வெளிநாடுகளுக்குச் செல் லும்போது உள்ளூர் தோசை கிடைக்காதா எனப் பலமுறை ஏங்கியிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

அண்மைய பேட்டி ஒன்றில் தனக்குப் பிடித்தமான உணவு வகைகள், இளையர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் ஆகியவை குறித்து விலாவாரியாகப் பேசியுள்ளார் ஹரிஷ்.

'பியார் பிரேமா காதல்' படத்துக்காக அதர்பைஜான் என்ற ஊருக்கு படப்பிடிப் புக்காகச் சென்றிருந்தன ராம். இது சிரியா அரு கில் இருக்கும் சின்ன ஊர். அங்கு கிடைக்கும் உணவு வகைகள் எல் லோருக்கும் ஒத்துக் கொள்ளாது.

"அரிசி சாதமே கண்ணில் தென் படவில்லை. ஐரோப் பிய, அரேபிய, ரஷ்ய உணவு வகைகளே அதி கம் கிடைத்தன.

"எதைச் சாப் பிடுவது என்று தெரியாமல் மிக வும் சிரமப்பட் டேன்.

"படக்கழு வில் இருந்த மற் றவர்கள் எப்ப டியோ சமாளித்து விட்டனர். சிரியா என்றால் உலகம் முழுவதும் பிரபல மாக உள்ள உணவு வகை கள் கிடைக்திருக்கும்.

"ஆனால் அங்குச் சென்று வர முடியாத சூழ்நிலை. இதனால் ஒட்டுமொத்த படப்பிடிப்பின் போதும் காய்கறிகளை உள்ளடக்கிய சாலட் மட் டுமே உணவாக இருந்தது," என்கிறார் ஹரிஷ்.

பொதுவாக பல வகையான உணவுகளைச் சாப்பிடுவது என்றால் இவருக்கு ரொம்பப் பிடிக் குமாம். அதேசமயம் கிடைத்த அனைத்தையும் சாப்பிட முடியாது என்பதால் தனது உடல் நலத்துக்கு எது ஒத்துவருமோ அதை மட்டுமே சாப்பிடுவதாகச் சொல்கிறார்.

"என்னைப் போன்று நடிப்புத் துறைக்கு வர நினைப்பவர்களுக்கு மட்டுமல்ல, பொதுவாகவே மாணவர்கள், இளையர்கள் நல்ல உணவுப் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்கா கவே எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். சிறு வயது முதலே சாப்பிடும் விஷயத்தில்நான் அடம்பிடிக்க மாட்டேன்.

"நிறைய காய்கறிகள் சாப்பிடப் பிடிக்கும். கீரைக் கூட்டு, கேரட் பொறியல் ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடுவேன். சிறு வயதில் பள்ளிக்குப் போகும் போது என் அம்மா நெய் கலந்த பருப்புச் சோறு தருவார். இப்போதும் கூட அதன் மீது எனக்கு கூடுதல் விருப்பமுண்டு," என்று கடந்த காலத்தை அசைபோடும் ஹரிஷ் தென்னிந்தியா வில் எந்த உணவகத்துக்குச் சென்றாலும் தோசையைத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம்.

சிறு வயதில் தனது வீட்டுக்கு அருகே மிகச் சிறிய உணவகத்தில் கிடைத்த பிரியாணியின் சுவையை இதுவரை வேறு எங்குமே தாம் உணர்ந்ததில்லை என்கிறார். பொதுவாகவே பெரிய உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவது ஹரிசுக்குப் பிடிக்காதாம். சாலையோர, சிறு உண வகங்கள் என்றால் ரொம்பப் பிடிக்குமாம்.

"இப்போதுதான் துரித உணவகம், காஃபிக்கு என தனிக் கடை என்றெல்லாம் உள்ளன. ஆனால், நான் பள்ளியில் படித்த காலத்தில் அப்படியெல்லாம் இல்லை. பெரும்பாலும் சாலையோர உணவகங்களில்தான் அதிகம் சாப்பிடு வேன். குறிப்பாக நண்பர்களுடன் சென்றால், எங்களுக்குப் பிடித்தமான நான்கைந்து கடைகளில் ஒன்றில்தான் சாப்பிடுவோம். அது ஒருவித மான ஜாலியான உணர்வு. ஆனால் நடிகனான பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது," என்கிறார் ஹரிஷ்.

உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற் றில் கவனம் செலுத்தினாலும் பிடித்தமான உணவுகளை சாப்பிடத் தவறுவதில்லை என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!