சுடச் சுடச் செய்திகள்

கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ஜான்வி

சக நடிகரைக் காதலிக்கிறீர்களா என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிப்பதைத் தவிர்த்தார் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.

இவரும் இந்தி நடிகர் இஷான் கட்டாரும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி, தாம் பொதுவாக நண்பர்களுடன் வெளியே அதிகம் சுற்றுவதில்லை என்றார்.

இஷான் குறித்து அவரது தந்தை என்ன நினைக்கிறார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு வெட்கத்துடன் பதிலளித்த ஜான்வி, “இஷான் நல்ல நடிகர், நல்ல பையன் என்று என் தந்தை கருதுகிறார்,” என்றார்.

இதனிடையே, இஷான் கட்டார் வேறொரு நடிகையைக் காதலிப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது. 

இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கவும் ஜான்வி மறுத்துவிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon