பொதுவாக ஒரு திரைப்படம் சம்பந்தப்பட்ட விளம்பர நிகழ்வுகள் எதிலும் நயன்தாரா பங்கேற்பதில்லை.
இந்நிலையில், அவர் நடித்த ஒரு காட்சியை வைத்தே 'இமைக்கா நொடிகள்' படத்தை விளம்பரம் செய்து வருகிறது தனியார் தொலைக்காட்சி நிறுவனம்.
நயன்தாரா நடித்துள்ள இப்படத்தின் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள அந்நிறுவனம் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அதை ஒளிபரப்ப உள்ளது.
அப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் நயன்தாரா யாரிடமோ தொலைபேசியில் பேசுவார். அந்தக் காட்சியில் இடம்பெற்றுள்ள உண்மையான வசனங்களை நீக்கிவிட்டு, புதிய வசனத்தை நுழைத்துள்ளது இந்த தொலைக்காட்சி நிறுவனம்.
"மேடம், முதன்முதலாக எங்கள் சேனலுக்கு வருகிறீர்கள். நேரத்தை தெரிவித்தால் நன்றாக இருக்கும்," என்ற குரல் ஒலிக்க, அதற்கு நயன்தாரா, "நீங்களே சொல்லுங்கள்," என்கிறார். பிறகு, "3.30 மணிக்கு வந்துவிடுகிறேன்," என்றும் சொல்கிறார்.
இந்த விளம்பரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பாம். நயன்தாராவின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக கோடம்பாக்கத்துப் புள்ளிகள் குறிப்பிடுகிறார்கள்.

