முன்னாள் நடிகை லைலா சினிமாவில் இருந்து விலகும் வரை ஒரு படத்திலும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்ததில்லை.
இந்நிலையில், அவர் விஜய்யுடன் நடனமாடும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதைக் கண்டு விஜய் ரசிகர்களுக்கு ஆச்சரியமும் குழப்பமும் ஏற்பட்டது.
ஆனால் ஒரு சிலர் மட்டும் அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பதை சரியாகக் கணித்தனர். விஷயம் இதுதான்.
'உன்னை நினைத்து' படத்தில் முதலில் விஜய்தான் ஒப்பந்தமானார். பிறகு அவர் விலக, சூர்யா நாயகன் ஆனார். விஜய்யுடன் இப்படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தைத்தான் லைலா பகிர்ந்துள்ளார்.

