இணையம் வழி பெண்களுக்குச் சிலர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாகப் புகார் எழுப்பி உள்ளார் நடிகை பார்வதி நாயர். பிறரை நோகடிப்பதற்கு இணைய அச்சுறுத்தல்களைச் சிலர் ஓர் உத்தியாகவே கடைப்பிடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்படும் பல பெண்கள் சகிப்புத்தன்மையின் உச்சத்தைக் கையாண்டு கொண்டிருப்பதாகக் குறிப் பிட்டுள்ள அவர் இணையம் வழியிலான அச்சுறுத் தல்கள் என்பன கூலிப்படைகளை ஏவுவதற்குச் சமம் என்றும் கூறியுள்ளார்.
தற்போது மனு அசோகன் இயக்கத்தில் 'உயிரே' என்ற படத்தில் நடித்துள்ளார் பார்வதி. இப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் சமூக ஊடகங் களில் எதிர்கொள்ளும் வெறுப்புப் பிரசாரங்களை எவ்வாறு கையாள்கிறீர்கள்? என்ற கேள்விக்கு அவர் பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார்.
"சகிப்பின்மையின் உச்சத்தை நாங்கள் கையாண்டு கொண்டிருக்கிறோம். எதிர்ப்புகளை பதிவு செய்வதில் ஒரு மாண்பைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. எப்போதும் கும்பல் மனப் பான்மையில் இருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதுவும் ஒருவித பிரச்சாரம்தான்.
"பிறரை நோகடிப்பதை, அவர்கள் ஓர் உத்தியாகவே கடைபிடிக்கின்றனர். இப்படி யான நெருக்கடியை ஏற்படுத்துவதால் எதி ராளியை மவுனப்படுத்தலாம் என நினைக் கின்றனர். ஆனால், இத்தகைய சமூக ஊடக உத்தியை எல்லோருமே தெரிந்து வைத்திருக்கின்றனர். இவர்களை விட வும் பார்வையாளர்கள் புத்திசாலிகளாக உள்ளனர்" என்று பார்வதி கோபத்து டன் தெரிவித்துள்ளார்.
" வேலையற்றவர்கள்தான் இது போன்ற தாக்குதல்கள் மூலமாவது தங்களுக்கு ஓர் அடையாளம் கிடைக்காதா எனத் திரிவார்கள்" என்று குறிப்பிட்டுள்ள அவர் இத்த கைய நபர்கள் சில நேரங்களில் கொலை, பலாத்கார மிரட்டல்கள் கூட விடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.
"இந்நேரத்தில் என்னால் கண்ணியமாகப் பேச முடிகிறது என்றால், அதற்கு என்னைப் போன்ற அச்சுறுத்தலுக்குள்ளா னவர் உண்மையை உரக்கச் சொல்வதே காரணம்." என்று பார்வதி தெரிவித்துள்ளார்.

