தமிழ்ச் சினிமா ரசிகர்களைத் தனது யதார்த்தமான நடிப்பால் வசீகரித்து வந்த விஜய் சேதுபதி தற்போது பிறமொழி ரசிகர்களையும் கவரவேண்டும் என முடிவு செய்துள் ளார். இதையடுத்து மலையாளம், தெலுங்கு படங்களிலும் அவர் நடிக்கத் துவங்கி உள்ளார். இது
வரை பிறமொழியில் உருவாகும் நேரடிப் படங்களில் சேதுபதி நடித்ததில்லை. தற்போது முதன்முறையாக 'மார்கோணி மாதாய்' என்ற மலையாளப் படத்தில் நடிக்கிறார். மேலும் தெலுங்கில் உருவாகும் 'சயீரா நரசிம்ம ரெட்டி'யிலும் முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இது சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் படம். தமன்னா, நயன்தாரா உள்ளிட்டோரும் உள்ளனர். இதையடுத்து சிரஞ்சீவியின் மருமகன் வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார் சேதுபதி. இதிலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

