சுடச் சுடச் செய்திகள்

‘ஓய்வில்லா ஏழு ஆண்டுகள்’

கடந்த ஒரு வாரமாக ஷ்ருதிஹாசன் தனது காதலரைப் பிரிந்துவிட்டார் என்பது குறித்து தான் சினிமா ரசிகர்கள் அதிகம் பேசி வருகிறார்கள். 

இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில், தமது எதிர்காலத் திட்டங்கள், இதர விஷயங் கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அவர். எதிர்காலத்தை நோக்கிய தமது அடுத்தகட்ட நகர்வுகளின் முதல் நடவடிக்கை யாக ‘லாபம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பதைக் குறிப்பிடுகிறார் ஷ்ருதிஹாசன். 

இடையே தமிழ்ப் படங்களில் ஏன் நடிப்பதைத் தவிர்த்தீர்கள்?

“தவிர்க்கவில்லை. ஆனால், இடைவெளி ஏற்பட்ட காலத்தில் இரண்டு இந்திப் படங்களி லும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளேன். எல்லா மொழிகளிலும் நடிக்கவேண்டும் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் சந்திக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இதன் காரணமாகவே தமிழில் ஓர் இடைவெளி ஏற்பட்டது. அது சிலருக்கு நீண்ட இடை வெளியாகத் தோன்றி இருக்கலாம்.

இடையில் சில காலம் எந்த மொழியிலும் நடிக்கவில்லையே?

“உண்மைதான். என்னைப் பொறுத்தவரை அது மிகப்பெரிய இடைவெளி அல்ல. மூன்று மாதங்களுக்கும் குறைவாகவே திரைப்பணி களில் இருந்து ஒதுங்கி இருந்தேன். அது மனதளவில் என்னை மீண்டும் ஒருங்கி ணைப்பதற்கான  முயற்சி.

“தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு நான் ஓய்வெடுத்ததே இல்லை. அந்தச் சமயத்தில் கிருஸ்துமஸ், புத்தாண்டுக்கு மட்டுமே விடுப்பு எடுத்துக் கொள்வேன். இதுகுறித்து ஒருமுறை என் தந்தை கூட அறிவுரையுடன் கூடிய எச்சரிக்கை விடுத்தார். 

“இப்படி ஓய்வின்றி உழைத்தால் உணர்வுப் பூர்வமாகவும், கலை சார்ந்த வகையிலும் சோர்வடைய நேரிடும் என்று கூறியுள்ளார். ஆனால், இளமைப் பருவத்தில் நாம் பெற்றோர் கூறுவதை ஏற்பதில்லை. நானும் அப்படித்தான். ஆனால், அவர் சொன்னதுதான் நடந்தது” என்கிறார் ஷ்ருதி. 

இசைத் துறையில் சாதிக்கவேண்டும் என்பதே தமது லட்சியம் என்று குறிப்பிடுபவர் தமது இசையைக் கேட்பவர்கள் தனது மன துக்கு நெருக்கமான விஷயங்கள் குறித்து தாம் பாடுவதாக உணரவேண்டும் என விரும்புவதாகச் சொல்கிறார்.

“சிறு வயது முதலே பொருளாதார ரீதியில் நான் ஓர் இலக்குடன் செயல்பட்டுள்ளேன். எனது தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன். எந்த ஒரு பெண்ணும் இந்த நிலையை அடைவது மிக முக்கியம் என்று கருதுகிறேன். உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள். உங்களுக் கான சட்ட திட்டங்களை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள் என்பதே நான் பின்பற்றும் வாழ்க்கைத் தத்துவம்.”

கலைக்குடும்பத்தில் இருந்து திரையுல குக்கு வந்தவர் என்றாலும், தனது பெற் றோர் எந்த வகையிலும் தமக்காக சிபாரிசு செய்ய வில்லை என்கிறார் ஷ்ருதி. தமது பெற்றோர் ஒருமுறை கூட தமக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டு யாரிடமும்  பேசியதில்லை என்றும் கூறுகிறார்.

“ஒரு சிலர் நான் பெற்றோரின் சிபாரிசால் வளர்ந்திருப்பதாகக் கூற லாம். ஆனால் உண்மை அதுவல்ல. எனது முதல் படம் நன்றாக ஓடவில்லை. ஆனால் அதைக் கடந்து வந்ததால்தான் இன்று இந்த நிலைமையில் உள்ளேன். இதைச் சாதிக்க மிகுந்த தன்னம்பிக்கை தேவை. 

“கமல்ஹாசன், சரிகா வின் மகள் என்ற உறவைப் பயன்படுத்தி நான் திரை யுலகில் நுழையவில்லை. திரையுலகில் நானே என்னை வழிநடத்திக் கொண்டேன். பிரபலங்க ளின் மகள் என் பது எனக்குச் சவாலான விஷயமாகவே இருந்தது. ஆனால் அந்தச் சவால் சுவாரசியமான ஒன்றாகவும் அமைந்தது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon