தனுஷும் சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்த சங்கதிதான்.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் 'அசுரன்' படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 'அசுரன்' படத்தின் சுவரொட்டி ஒன்றை வெளியிட் டுள்ள தனுஷ், அதில் விரைவில் அசுர வேட்டை எனக் குறிப்பிட்டுள் ளார். இதனால் சில வாரங்களில் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து இப்படம் திரைகாணும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதாக வெளி யான தகவல் தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. 'அசுரன்' படத்தில் மஞ்சு வாரி யார், பசுபதி, 'ஆடுகளம்'' நரேன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக் றார்.
'அசுரன்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் தனுஷ், மஞ்சு வாரியர்.

