'பேரழகி ஐ.எஸ்.ஓ'

'பேரழகி ஐ.எஸ்.ஓ'

1 mins read
9c80b29f-df45-466b-96f4-01490335dbb8
விவேக் - ஷில்பா மஞ்சுநாத் -

'காளி' படத்தில் அறிமுகமான ‌ஷில்பா மஞ்சுநாத் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ'. 'நீ என்ன மாயம் செய்தாய்' படத்தில் நாயகனாக நடித்த விவேக்தான் இப்படத்தின் கதாநாயகன். இது அறிவியலை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் என்கிறார் இப்படத்தை தயாரித்து, இயக்கும் விஜயன்.சி.

"அறிவியல் தொடர்பானது என்றாலும் மிகவும் சீரியசாக இல்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் நகைச்சுவைக் காட்சிகளுடன் ஜனரஞ்சகமாக படத்தை உருவாக்கியுள்ளோம். மூத்த நடிகை சச்சு, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லி கணேஷ், மீசை ராஜேந்திரன் ஆகியோரின் கூட்டணியில் நகைச்சுவைக் காட்சிகள் தூக்கலாக இருக்கும். குறைந்த செலவில், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பல முக்கியக் காட்சிகளைப் படமாக்கி உள்ளோம்," என்கிறார் இயக்குநர் விஜயன்.சி.