தயாரிப்பாளர்களின் அச்சுறுத்தல்களைக் கண்டு தாம் பயப்படுவதில்லை என்று நடிகை நித்யாமேனன் தெரிவித்துள்ளார். அண்மையில் தன்னை மையமாக வைத்து எழுந்த சர்ச்சை குறித்தும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் விளக்கமளித்துள்ளார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் கவனிக்கத்தக்க நடிகையாக உருவெடுத்திருப் பவர் நித்யாமேனன். காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தற்போது உருவாகி வரும் 'த அயன் லேடி' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 'மெர்சல்' படத்திலும் நித்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற இவரைச் சந்திக்க தயாரிப்பாளர்கள் சிலர் வந்துள்ளனர். ஆனால், சில காரணங்களால் நித்யா மேனன் அவர் களைச் சந்திக்கவில்லை. இதனால் தயாரிப் பாளர்கள் தரப்பு கடும் அதிருப்தி அடைந்தது. நித்யா மேனன் திமிர் பிடித்தவர் என்றும், தங்களை அவமானப்படுத்தி விட்டதாகவும் தயாரிப்பாளர்கள் காட்டத்துடன் தெரிவித்திருந் தனர். மேலும், நித்யா மேனன் மலையாளப் படங்களில் நடிப்பதற்குத் தடை விதிக்க வேண் டும் எனும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. ஆனால், தாம் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என தொடக்கத்திலேயே விளக் கமளித்தார் நித்யா மேனன். அக்குறிப்பிட்ட தயாரிப்பாளர்கள் முன்கூட்டியே தகவல் தெரி விக்காமல் தன்னைச் சந்திக்க வந்ததாகவும், அதனால்தான் அவர்களுடன் பேசவும் முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தனது சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் தயாரிப்பாளர்கள்தான் தனிப்பட்ட முறையில் அவர்களை அவமதிப்பதாக கருதிவிட்டனர் என்றும் நித்யா தெரிவித்துள்ளார். "இந்தச் சம்பவம் நடைபெற்ற சமயத்தில் எனது தாயார் உடல்நலம் குன்றி இருந்தார். அவரைப் புற்றுநோய் பாதித்துள்ளது. மேலும் புற்றுநோய் மூன்றாம் நிலையை எட்டி இருந்தது. இதனால் நான் மிகுந்த வேதனைக்கு ஆட் பட்டிருந்தேன். "படப்பிடிப்பின்போது அம்மாவைப் பற்றிய நினைப்பு வந்ததால் மனம் கலங்கிப் போனேன். எனக்களிக்கப்பட்ட கேரவனுக்குச் சென்று அழுதுகொண்டே இருந்தேன். தொடர்ந்து அழுததால் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டு அந்த வேதனையும் சேர்ந்து கொண்டது. அச்சமயம் யாருடனும் பேசக்கூடிய மனநிலையில் நான் இல்லை. "தயாரிப்பாளர்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டனர். என்னைப் பற்றிக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நான் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்குச் செவிசாய்ப்பதோ பயப்படுவதோ இல்லை. மாறாக, எனது பணியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்," என்று அண்மைய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தைரியமாகக் குறிப்பிட்டுள்ளார் நித்யா மேனன். காலஞ்சென்ற ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவின் வாழ்க்கை வர லாற்றை மையமாக வைத்து உருவாகி உள்ள 'கதாநாயக்' படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் நித்யா. தற்போது இவர் கைவசம் 12 படங்கள் இருப்பதாகத் தகவல். ஒவ்வொரு படத்திலும் வித்தி யாசமான கதாபாத்திரம், மாறு பட்ட கதைக்களம் என்பதால் தான் அவற்றை ஏற்றுக் கொண்ட தாகச் சொல்கிறார். சவாலான கதாபாத்திரம் என்றால் சம்பள விஷயத்தில் இவர் அவ்வளவாக கறார் காட்டுவதில்லை எனும் நல்ல பெயரையும் சம்பாதித்து வைத்துள்ளார். வாழ்க்கை வரலாற்றுப் படங்கள், ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறாராம். அதே சமயம் அத்தகைய படங்களில் நடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்கிறார். "சற்றே சோடை போனாலும், இத்தகைய படங்கள் தோல்வி கண்டு விடும். சிறு கதாபாத்திரமாக இருந் தாலும் இத்தகைய படங்களில் இடம் பெறும் கதாபாத்திரங்களில் நடிக்க பொருத்தமான கலைஞர்களைத் தேர்வு செய்ய வேண்டும். "அப்போது தான் ஒரு பிரபலத்தின் வாழ்க்கையை கச்சிதமாக திரையில் சொல்ல முடியும்," என்கிறார் நித்யா மேனன்.
நித்யா மேனன்: அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சமாட்டேன்
3 mins read
நித்யாமேனன் -

