த்ரிஷா நடித்துள்ள 'பரமபதம் விளையாட்டு' தயார்

த்ரிஷா நடித்துள்ள 'பரமபதம் விளையாட்டு' தயார்

1 mins read
2eb31ed7-8abe-4739-8a5f-a5df08353f89
-

த்ரிஷா நடித்துள்ள 'பரமபதம் விளையாட்டு' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.

கடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை த்ரிஷா.

இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்சமயம் புதிய இளம் நடிகைகளுக்கும் இவர் போட்டியாக கதாநாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை த்ரஷா ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

அவற்றில் ஒன்றுதான் விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ள 'பரமபதம் விளையாட்டு' என்ற படம்.

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷாவுடன், நந்தா துரைராஜ், ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோனா உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

படத்தை திருஞானம் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை '24 ஹவர்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற் போது படப்பிடிப்புக்குப் பிந்திய பணிகள் நடை பெற்று வருகின்றன.

இதையடுத்து இந்தப் படம் வெளியீடு காண விருக்கிறது. இந்த நிலையில் இந்தப்படத்தின் முன்னோட்டக்காட்சி நேற்று வெளியானது. த்ரிஷா வின் பிறந்த நாளான மே 4ஆம் தேதி அன்று முன்னோட்டக் காட்சி திரையிடப்பட்டுள்ளது.