ரஜினிகாந்தின் பேட்ட படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாகக் களமிறங்குகிறார்.
இம்முறை காதலை எதிர்க்கும் வில்லனாக அவர் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதா நாயகனாகத் திகழும் நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் ஏராளமான படங்களில் நடித்து வரு கிறார்.
தமிழை அடுத்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
ஆனால் எல்லா படங்களிலும் கதா நாயகனாக நடிப்பேன் என்று இவர் அடம் பிடிப்பது இல்லை.
தன்னுடைய 'கதாநாயன் இமேஜ்' பார்க்காமல் 'பேட்ட' படத்தில் ரஜி னிக்கு வில்லனாகவும் நடித்திருந் தார்.
இந்நிலையில் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் 'சயீரா நரசிம்ம ரெட்டி' படம் மூலம் தெலுங் கில் அறிமுகமாகிறார்.
தற்போது மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தில் இவர் வில்லனாக நடிக்கவுள்ளாராம்.
நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்காவின் மகனும் நடிகர் சாய் தரம் தேஜின் தம்பியுமான வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாகவும் நடிக்கின்றனர்.
இந்தப் படம் காதலை மையப்படுத்தி உருவாகவுள்ளது. இந்தப்படத்தில் காதலுக்கு எதிரியாக நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தை புச்சி பாபு சனா என்பவர் இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

