முன்னோட்டக் காட்சியில் மிரட்டும் அதர்வா

முன்னோட்டக் காட்சியில் மிரட்டும் அதர்வா

2 mins read
7af49772-b138-44a2-a56b-af383528a485
-

சாம் ஆண்டன் இயக்கத்தில் உரு வாகி உள்ள '100' படம் வரும் 9ஆம் தேதி வெளியாகிறது. இந் நிலையில் இதன் முன்னோட்டக் காட்சிகளுக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு அளித்துள்ளனர்.

முதன்முறையாக இதில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் அதர்வா. அவருக்கு ஜோடி ஹன்சிகா. பள்ளிச் சிறுமிகளுக்கு நிகழும் கொடூரங்களை விவரிப்பது டன் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனும் கருத்தை இப் படத்தில் கூறியுள்ளனராம்.

முன்னோட்டக் காட்சிகளில் 'நான் வருவேன்; கண் முன்னாடி வந்து நிற்பேன்' என்று அதர்வா ஒரு வசனத்தைப் பேசுகிறார். இந்தக் காட்சியையும் வசனத் தையும் ரசிகர்கள் வெகுவாகக் கொண்டாடுகிறார்கள்.

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு அண்மையில் சென்னை யில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இசை யமைப்பாளர் சாம் சி.எஸ்., இயக்கு நர் சாம் ஆண்டன் திகில் கதை யைச் சொல்லி தன்னை ஏமாற்றி விட்டதாகக் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு 'விக்ரம் வேதா', 'அடங்க மறு', 'அயோக்கியா', உள்ளிட்ட படங்களுக்கு இசைய மைத்துள்ளார் இவர்.

இவை அனைத்துமே காவல் துறையுடன் சம்பந்தப்பட்ட கதைக் களத்தைக் கொண்டவை. அத னால் நகைச்சுவைப் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்புக் கிடைத் தால் நன்றாக இருக்கும் என நினைத்தாராம்.

"வெளியில் இருந்து பார்க்கும் போது நான் இசையமைத்த எல்லா படங்களும் ஒரே மாதிரி இருப்பதா கத் தோன்றும். ஆனால் திரைக் கதையில் ஒவ்வொன்றும் வித்தி யாசப்படுகிறது.

"ஒரு படத்தின் திரைக்கதை தான் அதற்குப் பின்னணி இசை யைக் கோரும். எனக்கு நகைச் சுவைப் படங்களில் பணியாற்ற விருப்பம்.

"இயக்குநர் சாம் என்னிடம் கதை சொல்ல வந்தபோது நல்ல தொரு நகைச்சுவைப் படம் நம்மி டம் சிக்கி உள்ளது என மகிழ்ந் தேன். ஆனால் இது போலிஸ் பட மாக, சீரியஸ் படமாகவே அமைந் துள்ளது," என்றார் சாம் சி.எஸ்.

இயக்குநர் சாம் திகில் கதை களைத்தான் மிகச் சிறப்பாக உரு வாக்குவதாகக் குறிப்பிட்ட அவர், படத்தில் தம்மால் சுதந்திரமாகப் பணியாற்ற முடிந்தது என்றார்.

இசைப்பணியை அவ்வப்போது கவனித்து ஊக்கம் கொடுத்தாராம் நாயகன் அதர்வா. சண்டைக் காட்சிகளில் காட்டியுள்ள வேகம் தம்மை அசர வைத்ததாகவும் அந்த இசையமைப்பாளர் கூறுகிறார்.

"இது சமூகத்தில் தற்போது நடக்கக்கூடிய விஷயங்கள் குறித் துப் பேசும் படம். இன்றைய கால கட்டத்துக்கு நிச்சயம் தேவைப்படும் ஒரு படம். பாடல்கள் அனைவரது கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளன.

"ஒட்டுமொத்தத்தில் இது அனைவருக்கும் பிடித்தமான படைப்பாக அமையும். எனவே ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்," என்கிறார் இசை யமைப்பாளர் சாம் சி.எஸ்.

இதற்கிடையே தான் அடுத்து நடிக்கும் படத்துக்கான படப் பிடிப்பில் பங்கேற்கத் தயாராகி வருகிறார் அதர்வா. இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் நடிப்பில் மேலும் இரண்டு படங்களை ரசி கர்கள் எதிர்பார்க்கலாம்.