சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்' படத்திற்கு வரவேற்பு

சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்' படத்திற்கு வரவேற்பு

1 mins read
fd992bfc-3737-4f08-8088-6dd4cb32379d
-

எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் முன்னோட்டக் காட்சிகளும் ஒரே ஒரு பாடலும் நேற்று வெளியானது. இவை வெளியான அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே இணையம் வழி ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்க ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். அண்மையில்தான் இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சி வெளியானது. அதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் சிவா ஜோடியாக நயன்தாராவும், ராதிகா, சதீஷ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இது காதலும் நகைச்சுவையும் சம விகிதத்தில் கலக்கப்பட்ட படமாம்.