ஓவியாவை கோபப்படுத்திய ரசிகர்

ஓவியாவை கோபப்படுத்திய ரசிகர்

1 mins read
dee992c6-e663-4a2d-9f34-32856936d8d1
-

இணையம் வழி ரசிகர்களுடன் உரையாடிய நடிகை ஓவியாவுக்கு ஒருவர் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

அண்மையில் தனது ரசிகர்களுடன் உரையாடிய ஓவியாவிடம், தன்னைத் திருமணம் செய்துகொள்ள ஓவியா தயாரா என ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஓவியா தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார்.

ஆனால், அதற்குள் இந்த உரையாடலில் குறுக்கிட்ட மற்றொரு ரசிகர் ஓவியா குறித்து மிக மோசமாகப் பதிவிட்டார். இதனால் ஓவியாவுக்கு கோபம் தலைக்கேறிவிட்டதாம். அவரும் தன் பங்குக்கு அக்குறிப்பிட்ட ரசிகரை ஏசியுள்ளார். இதையடுத்து அந்த மோசமான பதிவும் ஓவியாவின் கோபமான பதிலும் ரசிகர்களால் நீக்கப்பட்டன.

எனினும் ஓவியாவின் பதிலை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு பல ரசிகர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.