சுடச் சுடச் செய்திகள்

விடுமுறையை ரசிக்கும் சஞ்சிதா ஷெட்டி. 

கோடைகாலத்தின்போது எங்கேனும் பயணம் மேற்கொண்டு விடுமுறையை அனுபவிப்பது தனி சுகம் என்கிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. 

இந்தாண்டு கோடை வெயிலைச் சமாளிக்க வட இந்தியாவில் உள்ள குளிர் பிரதேசத்துக்குச் சென்றுள்ளாராம். கோடை விடுமுறைப் பயணத்துக்கான செலவை ஈடுகட்ட சில மாதங்களுக்கு முன்பிருந்தே பணம் சேமிக்கத் துவங் குவாராம். ஏப்ரல் மாதத்துக்குள் சேர்த்திருக்கும் தொகையைப் பொறுத்தே விடுமுறை செல்வதற்கான  இடத்தைத் தேர்வு செய்வாராம்.

“பெரும்பாலும் இத்தகைய பயணங்களின்போது நெருக்கமான தோழிகள்தான் உடன் வருவர். குறிப்பிட்டளவு பணம் சேர்ந்ததும் விமானப் பயணச்சீட்டை முன்பதிவு செய்துவிடுவேன். இந்த ஆண்டு வடஇந்தியாவில் உள்ள மலைப்பிரதேசங்களுக்குச் செல்வது என முன்கூட்டியே திட்டமிட்டதால் வசதியாகிப்போனது. எனது பள்ளி, கல்லூரித் தோழிகள் பலரும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர். எனவே இதுவரை நான் சென்ற பயணங்களிலேயே இதுதான் ஆகச் சிறந்ததாக இருக்கும் என நம்புகிறேன்,” என்கிறார் சஞ்சிதா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon