'கோமாளி'க்காக உடல் எடையைக் குறைத்த ஜெயம் ரவி

'கோமாளி'க்காக உடல் எடையைக் குறைத்த ஜெயம் ரவி

1 mins read
d7031301-bd3b-4437-99a1-9d7e210a44c4
-

ஒன்பது வேடங்களில் 'கோமாளி' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ஜெயம் ரவி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஒப்பனை களை வெளியிட்டு, படத்துக் கான விளம்பர வேலைகளில் இறங்கப் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 'கோமாளி' படம் குறித்து, படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கூறியபோது, "தொழில் நுட்பம் ரொம்பவே வளர்ந்து

விட்டது. உலகில் எந்த மூலையில் இருக்கும் ஒரு நபரையும் நினைத்த மாத்திரத்தில் தொடர்புகொண்டு பேச முடியும். ஆனால், கைத் தொலைபேசியிலேயே மொத்த உலகமும் சர்வசதா காலமும் மூழ்கி கிடக்கிறது. இதுதான் 'கோமாளி' படத்துக்கான கதைக்களம்.

"ஒன்பது ஒப்பனைகளையும் சிறப்பாகச் செய்து கொடுக்க ஜெயம் ரவி ஆர்வமாக ஒப்புக் கொண்டார். படத்தின் கதைப்படி, ஜெயம் ரவி, உடல் எடையைக் குறைத்து, ஏற்ற வேண்டும். அவர் ஒப்புக் கொள்வாரா எனத் தயக்கம் இருந்தது. அதையும் ஏற்றுக் கொண்டார். படம் துவங்குவதற்கு முன்பாகவே 15லிருந்து 20 கிலோ எனப் படிப்படியாக எடையைக் குறைத்தார். ஜெயம் ரவியின் 'அடங்க மறு', 'தனி ஒருவன்' போன்று இல்லாமல், சந்தோஷ் சுப்பிரமணியன்போல நகைச் சுவையாக இருக்கும். படத்தின் சில காட்சிகளில் இரண்டு மூன்று ஜெயம் ரவி தோன்றுவர். படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் நடித்துள்ளனர். படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார் இயக்குநர் பிரதீப்.