ஷ்ரத்தா. - அனுபவத்துக்காகவே அம்மாவாக நடித்தேன்

‘ஜெர்சி’ தெலுங்கு படத்தில் அம்மா வேடத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இளம் வயதிலேயே இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண் டுமா என்று பலரும் விசாரிக்கிறார் களாம். ஆனால் தமக்கு உடன் பாடில்லாத கதாபாத்திரங்களில் நடிப்ப தில்லை என்கிறார் ஷ்ரத்தா. 

“என்ன கதாபாத்திரத்தில் நடிக்கி றோம் என்பது முக்கியமல்ல, அந்தக் கதாபாத்திரத்துக்காக நாம் எத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். 

“ஒரு நடிகையாக அம்மா, மனைவி, காதலி, மாணவி என அனைத்துக் கதாபாத்திரங்களையும் ஏற்க வேண்டும். இந்த விஷயத்தில் நான் தெளிவாக உள்ளேன். ஒரு குழந்தைக்குத் தாயாக நடிப்பது அவ் வளவு சுலபமல்ல. அம்மா வேடத்தில் நடித்தால் அடுத்து என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். 

“ஒருமுறை நடித்தால் அடுத்த டுத்து அம்மா வேடத்தில் நடிக்க அழைப்பார்கள். ஆனால் அதுகுறித்து கவலைப்படாமல் அனுபவத்துக்கா கவே அம்மாவாக நடித்தேன். அதே     சமயம் அந்தப் படத்தில் என்னை பாடித் திரியும் வானம்பாடியாகவும் காண்பித்திருப்பார்கள்,” என்று சுட்டிக் காட்டுகிறார் ஷ்ரத்தா. 

இந்தியில் இவர் நடித்த ‘மிலன் டாக்கீஸ்’ படத்துக்கு விமர்சன ரீதி  யில் நல்ல வரவேற்று கிடைத்துள்ளது. ஆனால் வசூலில் படுத்துவிட்டதாம். இதனால் வருத்தத்தில் உள்ளார். 

“அந்தப் படம் ஓடவில்லை என்ப தில் நிச்சயமாக எனக்கு வருத்தம் உள்ளது. காரணம் நல்ல படைப்புகள் வெற்றி பெற வேண்டும். என்னைப் பொறுத்தவரை எல்லா படத்துக்கும் கடும் உழைப்பைத் தருகிறேன். 

“ஒரு திருமணத்துக்குப் பத்தி ரிகை கொடுத்து விருந்துக்கும் ஏற்பாடு செய்துள்ள நிலையில் யாருமே அந்த நிகழ்வுக்கு வரவில்லை என்றால் திருமண வீட்டார் வருந்து     வார்கள். உணவு இருந்தும் உண்ப தற்கு ஆள் இல்லை என்றால் எப்படி ஒரு தவிப்பும் வருத்தமும் ஏற்படுமோ, அதே மாதிரிதான் நடிகர்கள் நன்றாக நடித்தும் திரை அரங்குக்கு ரசிகர்கள் வராமல் காலி இருக்கைகளைப் பார்க்கும்போது மனசு வலிக்கும்,” என்று சொல்லும் ஷ்ரத்தா, மேடை நாடகங்களிலும் அசத்தியவர். 

மீண்டும் மேடையேற வேண்டும் எனும் விருப்பம் உள்ளதாம். நாடகங் களில் இவருடன் இணைந்து நடித்த சக நடிகர், நடிகைகளின் புதிய நாடகங்கள் அரங்கேறும்போது நேரமி   ருந்தால் நேரில் சென்று பார்ப்பாராம். 

நாடகம் முடிந்ததும் மேடைக்குப் பின்புறம் சென்று அனைவரையும் கட்டியணைத்துப் பாராட்டுவது இவரது வழக்கமாக உள்ளது.

“அந்தச் சமயத்தில் என்னையும் அறியாமல் உணர்ச்சி வசப்பட்டு அழுது விடுகிறேன். உண்மையில் நாடக மேடைக் கூட்டாளிகளுடன் நேரம் செலவிட முடியாததை எண்ணி ரொம்பவே வருந்துகி றேன். சினிமாவில் நடித்த பிறகு கூடுதல் நேரம் கிடைத்தால் நிச்சயம் மீண்டும் மேடையேறு வேன்,” என்று சொல் லும் ஷ்ரத்தா, மேடை நாடகங்களில் நடித்தது தான் தமது வாழ்வின் பொற்காலம் என்கிறார். 

என்னதான்  சட்டத் துறையில் பட்டம் பெற் றிருந்தாலும் நடிப்புத் துறைதான் தமக்கானது என்று உறுதியாக நம்புகி றாராம். தற்போது அஜித்  துடன் ‘நேர்கொண்ட பார்வை’யில் நடித்து வருபவர்,” அவருடன் செல்ஃபி படம் எடுத்துக் கொண்டது தமது வாழ்வின் மறக்க முடியாத தரு  ணம் என்கிறார். 

“அஜித் பழகுவதற்கு இனிமையானவர். மிகவும் நட்பாகப் பேசுவார். இந்தப் படத்தில் நடித் துள்ள 3 நாயகி களையும் வெவ் வேறு கோணங் களில் படம் பிடித்துள்ளனர்.

“எனக்கு நடிப்பு குறித்து பல நுணுக் கங்கள் தெரி யும். ஆனால். பலருக்குத் தெரிந்திருக்க வில்லை. அத் தகையவர் களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் உள்ள கூத்துப்பட் டறை போன்று ஒரு பயிற்சி மையம் உருவாக்க வேண்டும் என்பதே லட்சியம். எனது அந்த இலக்கு நோக்கி மெல்ல நடைபோடுகி றேன்,” என்கிறார் ஷ்ரத்தா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon