கோடம்பாக்கம் வரும் புது அழகி

கோடம்பாக்கம் வரும் புது அழகி

1 mins read
1283f7b1-350c-4848-90ec-b5304259ac48
அக்‌ஷரா ரெட்டி -

அழகிப் போட்டிகளில் பட்டம் வெல்லும் அழகிகள் உடனுக்குடன் திரையுலகில் அறிமுகமாவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அந்த வகையில் 'மிஸ் சூப்பர் க்ளோப் இந்தியா 2019' அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற அக்‌ஷரா ரெட்டிக்கும் நடிகையாகும் ஆசை உள்ளது.

240 பேர் பங்கேற்ற அழகிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 24 வயதான அக்‌ஷரா வாகை சூடியுள்ளார். இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட அனைவருடனும் ஜோடி சேர ஆசை. பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். அவர்களில் யார் மிகவும் அழகானவர்கள் என்பதைத் தீர்மானிக்கவே அழகிப் போட்டிகள் நடத்தப் படுகின்றன" என்று சொல்லும் அக்‌ஷராவுக்கு, பிடித்தமான அரசியல் தலைவர் என்றால் அது காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா தானாம்.

தமிழ்த் திரையுலகுக்கு இன்னொரு அழகி கிடைத்துள்ளார்.