புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கும் இடையே நிலவி வந்த மனக்கசப்பு ஒருவழியாகத் தீர்ந்தது எனத் தகவல்கள் கூறுகின்றன. திரை இசைத்துறையின் ஜாம்பவான்களான அவ்விருவரும் மீண்டும் ஒரே மேடையில் இணையவிருப்பதாக திரை ஊடகங்கள் கூறுகின்றன. பாடல்களின் காப்புறுதி தொடர்பில் அவ்விருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் எந்த ஒரு இசை நிகழ்ச்சியிலும் இணையவில்லை.
ஜூன் மாதம் 2ஆம் தேதி இளையராஜாவின் பிறந்தநாளை ஒட்டி இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி இளையராஜாவின் பாடல்களைப் பாடுவார். அவருடன் கே.ஜே. இயேசுதாஸ், மனோ, பாம்பே ஜெயஸ்ரீ உள்ளிட்ட கலைஞர்கள் மேடையேறுவர். நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

