கேரள ரசிகர்களால் 210 அடிக்கு உயர்ந்த சூர்யா

கேரள ரசிகர்களால் 210 அடிக்கு உயர்ந்த சூர்யா

1 mins read
078c3e37-3540-4a69-b40e-dfef3c216ac4
-

சூர்யா நடித்துள்ள 'என்ஜிகே' படம் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது செல்வராகவன் இயக்கி யுள்ள படம் என்றாலும் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்க்கும்போது அவர் தனது பாணியில் இருந்து விலகி கேவி ஆனந்த், ஹரி போன்ற வர்கள் பாணியில் வணிக ரீதியாக படத்தை இயக்கி இருப்பது போன்றே தெரிகிறது. அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித் துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டை வெகு விமரிசையாக கொண்டாடத் தயாராகி வருகிறார்கள் கேரளாவில் உள்ள சூர்யாவின் ரசிகர்கள். விஜய், அஜித்துக்கு அடுத்த படியாக கேரளாவில் சூர்யாவிற்கு ரசிகர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். அதனால் இந்தப் படத்தை கொண்டாடும் விதமாக இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் இதுவரை வைக்காத விதமாக சுமார் 210 அடி உயரமுள்ள 'கட் அவுட்டை' உருவாக்கி வருகிறார்கள். இதற்கு முன்பு அஜித்தின் 'விஸ்வாசம்' படத்திற்கு 190 அடி உயரத்தில் 'கட் அவுட்' வைக்கப்பட்டிருந்தது தான் சாதனையாக இருந்தது.