பெண்களுக்குத் தீங்கிழைப்பவர்களுக்குக் கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறார் நடிகை பூர்ணா.
சரியான தண்டனை கொடுத்தால்தான் தவறு களின் எண்ணிக்கை குறையும் என்றும் ஒரு கட்டத்தில் தவறுகளே நடக்காது என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல நடிகை என்று பெயரெடுத்திருந்தாலும் பூர்ணாவுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனினும் அவ்வப்போது தேடி வரும் பட வாய்ப்புகளை ஏற்று அதில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
சினிமாவில் நடிப்போம், கதாநாயகி ஆவோம் என்றெல்லாம் இவர் நினைத்துப் பார்த்ததே இல்லையாம். ஆனால் விதி தன்னை நடிகையாக்கி விட்டது என்கிறார்.
"நடந்தது, நடப்பது, நடக்கப் போவது ஆகிய அனைத்துமே முன்பே எழுதப்பட்டது. நான் யாருடைய ஆதரவும் இல்லாமல்தான் இந்தத் துறையில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்.
"இதுவரை நடந்தது குறித்து எனக்குத் திருப்திதான் உள்ளது. என்னதான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அரசாங்கம் சொன் னாலும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன.
"என்னைத் தனியாக ஓரிடத்துக்குக் அல்லது படப்பிடிப்புத் தளத்துக்கு அனுப்புவது என்றால் கூட என் தாயார் பயப்படுகிறார். ஒன்று அவர் என்னுடன் வருவார், இல்லையெனில் என்னிடம் கடந்த 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் என் அக்கா வைப் போன்ற ஒருவர் துணைக்கு வருவார்," என்கிறார் பூர்ணா.
தற்போது பெண்களுக்கு நடக்கும் கொடூ ரங்களைக் கண்டு தனது தாயார் மிகவும் அச்சமடைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளவர், தற் போது நடப்பவற்றைப் பார்க்கும்போது தமக்கும் கூட யாரை நம்புவது, நம்பக்கூடாது என்பது தெரியவில்லை என்கிறார்.
"நடன வகுப்புக்குச் சென்றால் கூட என்னுடன் யாரேனும் துணைக்கு இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் என் தாயார். இப்படி நாடு முழுவதும் உள்ள தாய்மார்கள் பயப்படுவது என் கவலையை அதிகப்படுத்துகிறது.
"எனவேதான் பெண்கள் விஷயத் தில் தவறு செய்பவர்களுக்குச் சரி யான தண்டனை வழங்க வேண்டும் என்கிறேன்.
"அப்போதுதான் பெண்கள் அச்சமின்றி வெளியே செல்ல முடியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு வெளிநாடு களில் கடும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை. இந்த நிலை மாற வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு தேவை," என்று வருத்தத்துடன் கூறுகிறார் பூர்ணா.

