‘எனை சுடும் பனி’

‘டீ கடை பெஞ்ச்’, ‘என் காதலி சீன் போடுறா’ ஆகிய படங்களில் நடித்த வெற்றி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘எனை சுடும் பனி;. ராம்ஷேவா இயக்குகிறார். உபாசனா, சுமா பூஜாரி என இரண்டு கதாநாயகிகள். பாக்யராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மேலும் சிங்கம்புலி, மனோபாலா, சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோரும் இதில் உள்ளனர்.

“கதைப்படி, நாயகனும் நாயகியும் சிறு வயதிலிருந்தே ஒன்றாகப் படித்துப் பழகியவர்கள். உபாசனா தானே முயற்சி செய்து உழைத்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்கிறார். வெற்றி சாதாரண நிலையில் இருந்தாலும் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்நிலையில் வில்லனாக நுழைகிறான் ஒருவன். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சுவாரசியமாக விவரிக்கிறது திரைக்கதை. படம் இளையர்களை நிச்சயம் கவரும். கிராமத்தில் நிகழும் ஒரு கொலைச்சம்பவம் குறித்து பாக்யராஜ் சாதுரியமாக துப்பறியும் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும்,” என்கிறார் இயக்குநர். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon