தாம் காதல் வயப்பட்டிருப்பதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபல மான இவர், தமிழில் 'பாயும் புலி', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'ஆறாது சினம்', 'சத்திரியன்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இவரது செயல்பாடுகள் நேயர்களால் பலவா றாக விமர்சிக்கப்பட்டன. விமர்சனங் கள் எப்படி இருந்தால் என்ன? தமக்குக் கிடைத்த புகழ் மூலம் புதுப்படங்களில் ஒப்பந்தமான வரை ஐஸ்வர்யாவுக்கு மகிழ்ச்சிதான்.
தற்போது 'கெட்டவன்னு பேர் எடுத்தால் நல்லவன்டா', 'அலேக்கா', 'கன்னித்தீவு' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.
இந்நிலையில் இவர் மனதில் காதல் மலர்ந்திருக்கிறதாம். இதைத் தமது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது போதாதா?
இந்தப் பதிவைக் கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறியதுடன் அந்தக் காதலர் யார்? எப்படிப்பட்டவர்? என்று பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டு வருகின்றனர்.

