ரித்திகாவின் கவர்ச்சிக்கு எதிர்ப்பு

ரித்திகாவின் கவர்ச்சிக்கு எதிர்ப்பு

1 mins read
39c6b484-1507-4c37-ba08-68fcaaf51a45
-

ரசிகர்களைக் கவர வேண்டும் எனும் முடிவுடன் தமது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ரித்திகா சிங். அவர் எதிர்பார்த்தது போலவே அந்தப் படங்களை ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

எனினும் இந்தளவு கவர்ச்சி யான படங்களை வெளியிட்ட தற்கு ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுதான் ரித்திகா எதிர்பாராத ஒன்று. அளவுக்கு மீறி கவர்ச்சி இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனதாக பலர் தெரிவித்துள்ளனர்.

"நீங்கள் நன்றாக தடிக்கத் தெரிந்தவர். உங்களுக்கு இதுபோன்ற கவர்ச்சி சரிபட்டு வராது. இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள்," என்றும் பலர் பதிவிட்டுள்ளனர்.

அதேசமயம் இந்தப் படங்கள் படு சூடாக இருப்பதாக ஒருதரப்பினர் கூறியிருப்பது ரித்திகா சிங்கைத் திருப்தியடைய வைத்திருக்கும்.

'ஆண்டவன் கட்டளை', 'சிவலிங்கா' உள்ளிட்ட படங்கள் வெளியான பிறகு அரவிந்த் சாமியுடன் ரித்திகா இணைந்து நடித்த 'வணங்காமுடி' பணப்பிரச்சினையால் இதுவரை வெளியாகவில்லை.

அதன் பின்னர் உரிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவிப்பில் உள்ளார் ரித்திகா. இதையடுத்து வாய்ப்புத் தேடும் நோக்கில் அவர் கவர்ச்சிப் புகபைப்படங்களை வெளியிட்டதாகத் தெரிகிறது.