'பொன்னியின் செல்வன்' படத்தில் சிம்பு நடிப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் அவர் அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்ற செய்தி வெளிவந்தது. சிம்பு அந்தப் படத்தில் நடிக்காததற்கு காரணம் 'லேடி சூப்பர் ஸ்டார்'தான் என்ற செய்தி தற்பொழுது வெளியாகி பலரையும் வருத்தப்பட வைத்திருக்கிறது.
தமிழ்த் திரையில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறந்த இயக்குநர்களில் ஒருவரான மணிரத்தினம் சுமார் ரூ.800 கோடியிலிருந்து ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 'பொன்னியின் செல்வன்' படத்தை பிரம்மாண்ட
படைப்பாக இயக்குவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார். அந்த வகையில் இப்படத்தில் விஜய், விக்ரம், கார்த்தி, சிம்பு, ஜெயம் ரவி, சத்யராஜ், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ்
என முன்னணி நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுத்து படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க இருந்தார்.
இவர்களுடன் தமிழ்த் திரையின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாராவையும் இப்படத்தில் நடிக்க வைக்க மணிரத்னம் முயற்சித்தார். ஆனால் நயன்தாரா, "சிம்பு இந்தப்
படத்தில் நடித்தால் நான் நடிக்க மாட்டேன்," என்று கறாராக இயக்குநரிடம் கூறிவிட்டாராம். இந்தத் தகவல் மணிரத்னம் தரப்பிலிருந்து சிம்புவுக்குத் தெரியவர, "நான் ஏன் இயக்குநர் மணிரத்தினத்திற்கு இடைஞ்சலாக இருக்கவேண்டும்? இப்படத்திலிருந்து நானே விலகிக்கொள்கிறேன்," என்று கூறி சிம்பு
நாகரிகமாக விலகி விட்டாராம்.
தமிழ்த் திரையின் பிரபல நடிகர்களுள் ஒருவரான சிம்பு, நடிகை நயன்தாராவை பல ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் அந்தக் காதல் முறிந்து, சிம்புவிற்குப் பிறகு பிரபுதேவா எனத் தொடங்கி தற்போது விக்னேஷ் சிவனுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்
நயன்தாரா. கூடிய விரைவில் விக்னேஷ் சிவன் உடனான காதல், நிச்சயதார்த்தம் வரை செல்லவிருக்கிறது.
இந்நிலையில் நயன்தாரா சில காலங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் "நான் என் முதல் காதலரைக் கூட மன்னித்து விடுவேன். ஆனால் இரண்டாம் காதலரை என் வாழ்நாளில் எப்போதும் மறக்கவும் மாட்டேன். மன்னிக்கவும் மாட்டேன்," எனக் கறாராக கூறியிருந்தார்.
அதற்கு ஏற்றவாறே அம்மணி பல ஆண்டுகளுக்குப் பின்னர் சிம்புவுடன் சேர்ந்து 'இது நம்ம ஆளு' என்ற படத்தில் நடித்திருந்தார். அப்போது அவருக்கு 'லேடி சூப்பர் ஸ்டார்' அந்தஸ்தெல்லாம் கிடையாது. ஆனால் தற்போது 'லேடி சூப்பர் ஸ்டார்' என்ற மமதையில் சிம்புவுடன் சேர்ந்து நடிக்க நயன்தாரா மறுத்துள்ளாராம்.
இந்தச் செய்தி வெளியானதில் இருந்து திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பிரம்மாண்டமான வரலாற்றுக் கதையில் நடிக்க சிம்புவுக்குக் கிடைக்க இருந்த வாய்ப்பை இப்படி கெடுத்துவிட்டாரே என்று நயன்தாராவை கடிந்து வருகின்றனர்.

