அஜித்துடன் இணையும் நிக்கி கல்ராணி

அஜித்துடன் இணையும் நிக்கி கல்ராணி

2 mins read
9da142d3-8e45-4281-aaab-220087e58c9b
நிக்கி கல்ராணி -

சென்ற ஆண்டு அதிக படங்களில் நடித்தவர் என்ற பெயரைத் தட்டிச் சென்ற நிக்கி கல்ராணிக்கு இந்த ஆண்டு அந்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவரிடம் வாய்ப்புகள் குறைந்ததுபோல் தெரிகிறதே? என்று கேட்டதற்கு, "வாய்ப்புகள் குறைந்து விட்டதாக சொல்வதைவிட, நான் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கிவிட்டேன் என்று சொல்லலாம்.

"ஒரு கதையைக் கேட்கும்போது இந்தப் படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு ரசிகராக யோசிப்பேன். எனக்குப் பல்வேறு வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை. அதனால் படங்களைத் தேர்வு செய்து

நடிக்கிறேன்," என்றார் அவர்.

'டார்லிங்' படத்தில் அறிமுகமான நிக்கி கல்ராணி வந்த வேகத்தில் 10 படங்களுக்கு மேல் நடித்தார். தற்போது அவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் 'கீ' படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. இரண்டாவதாக சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

மேலும் அஜித் நடிக்கும் அடுத்த படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

அஜித் தற்பொழுது நடித்து முடித்திருக்கும் 'நேர்கொண்ட பார்வை' என்ற படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குநர் எச்.வினோத் இயக்கத் திலேயே நடிக்க இருக்கிறார்.

அந்தப் படம் அதிரடி சண்டைப் படமாக உருவாக இருக்கிறது. அதனால் அந்தப் படத்தில் அதிகமாக காதல் காட்சிகள் கிடையாது என்பதால் படத்தின் நாயகி யாக நடிக்க முன்னணி நடிகை தேவை இல்லை என்ற காரணத்தினால் நிக்கி கல்ராணியை படக்குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.