சில்க் சுமிதாவை தொடர்ந்து சகுந்தலா தேவியின் வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை வித்யா பாலன். 'கணக்குப் புலி', 'மனித கணிப்பொறி' என்ற சிறப்புப் பெயர்களைக் கொண்ட சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். இந்தச் செய்தியை வித்யா பாலன் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
எண்களைப் பெருக்கி விடை கூறுவதில் இயந்திரத்தைவிட மின்னல் வேகத்திறன் கொண்டவர் சகுந்தலா. எண்களின் கனமூலத்தைச் சொல்வதில் பலமுறை கணினியைத் தோற்கடித்தவர். 1980இல் லண்டனில் உள்ள 'இம்பீரியல்' கல்லூரியில் இரண்டு 13 எண்களைப் பெருக்கி 23 விநாடிகளில் பதில் கூறி, 'கின்னஸ்' புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கணிதம் தவிர, நாவல்கள், சமையல் குறிப்புகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் சகுந்தலா தேவி.

