சென்ற ஆண்டு விஜய், விக்ரம், விஷால் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஒரு தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில் போனி கபூர் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக் கிறார். அந்தப் படம் வெற்றிப்படமானால் அவரை இனி தென்னிந்திய திரை களில் பார்ப்பது அரிது என்று கூறப்படுகிறது.
அத்துடன் அவர் அமித் ஷர்மா இயக்கத்தில் மேலும் ஒரு புதிய இந்திப் படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
1950ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை யிலான இந்திய காற்பந்து வரலாற்றைச் சொல்வதோடு, இந்திய காற்பந்துப் பயிற்சி யாளர் சையத் அப்துல் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்த நிலையில் 'மேயாத மான்', 'மெர்க்குரி' ஆகிய படங்களைத் தயாரித்த கார்த்திக் சுப்புராஜ் அடுத்த தாக ஓர் அதிரடி மர்ம திரைப்படத்தைத் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய் திருக்கிறார்.
நாயகன் இல்லாத இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தைச் சுற்றித் தான் மொத்த கதையும் நகர்கிறது என்பதால் அவரிடமிருந்து அதிகமான நாட்களைப் பெற்றிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
அதற்காக பெரிய தொகையை சம்பளமாகக் கொடுக்கவும் சம்மதித்து இருக்கிறார்.
இந்தப் படத்தை ஈஸ்வர் என்ற புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

