பஞ்சாயத்து முடிந்து வெளியானது 'அயோக்யா'

பஞ்சாயத்து முடிந்து வெளியானது 'அயோக்யா'

1 mins read
d431e877-d754-4a4b-b2e2-b7ab65dc1c0a
விஷால் -

விஷால் நடித்த 'அயோக்யா' படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாக வேண்டிய சூழலில் கடைசி நேர நிதிப் பிரச்சினையால் வெளியாகாமல் போனது.

இதனிடையே படத்திற்கான சிக்கல்களைத் தீர்த்து படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்த விஷால், சில கோடிகளை விட்டுக் கொடுப்பதாக உடன் படிக்கை செய்து கொண்டார். அதை ஏற்று நேற்று தமிழ்நாட்டில் சில இடங்களில் படம் வெளியாகி உள்ளது.

அவருடைய உடன்படிக்கையில் சம்பளத்தில் இருந்து 1 கோடி ரூபாயைக் குறைத்துக் கொண்டாராம் நடிகர் விஷால். அதோடு 'அயோக்யா' படத்தை

மறுபதிப்பு செய்து வெளியிடக் கூடாது என்று முதலில் சொன்னதை மாற்றிக் கொண்டு இப்போது வேறு மொழிகளில் மறுபதிப்பு செய்யலாம் என்றும் சொல்லி விட்டாராம். அதன் வழியில் வரும் 2 கோடி ரூபாயையும் தயாரிப்பாளரே எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறி விட்டார்.

மொத்தமாக 3 கோடி ரூபாய் வரை விட்டுக் கொடுத்து விடுகிறேன். இதற்கு மேலும் படத்தைத் தடுக்காதீர்கள். படம் வெளியாகட்டும் என்று விஷால் சொன்னதாகக் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான விஷால் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா எனக் கோலிவுட் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறது.