ஐஸ்வர்யா ராஜேஷ்: என் காதலரை என் கண்ணில் காட்டுங்கள்

ஐஸ்வர்யா ராஜேஷ்: என் காதலரை என் கண்ணில் காட்டுங்கள்

1 mins read
31598bb1-cf21-4fa9-9b1a-7e7b3c09d983
ஐஸ்வர்யா ராஜேஷ் -

தமிழ்த் திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவருடைய நடிப்பில் அண்மையில் வெளிவந்த 'கனா' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ஐஸ்வர்யா.

இந்த நிலையில், "ஐஸ்வர்யா ராஜேஷ் யாரையோ காதலிக் கிறார். அவரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்.

திருமணம் முடிந்ததும் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கமாட்டார்," என்ற செய்தி வெளியானது. ஓர் ஊடகத்தில் செய்தி ஒன்று வந்துவிட்டால் அடுத்த சில நிமிடங்களில் அந்தச்

செய்தி கண்,

காது, மூக்கு வைத்து மிக வேகமாக பரவும் என்பது தெரிந்ததே.

அதுபோல் பரவிய இந்த செய்திக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டரில், "வணக்கம் நண்பர்களே. என் காதல் கதை குறித்த வதந்திகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

"வதந்தி பரப்புபவர்கள் என் காதலன் யார் என்பது குறித்து எனக்கும் சொல்லுங்கள். அவர் யார் எனத் தெரிந்துகொள்ள நானும் ஆவலுடன் இருக்கிறேன். இதுபோன்ற பொய்யான செய்திகளைப் பரப்புவதைத் தயவுசெய்து முதலில் நிறுத்துங்கள். எனக்கு ஏதாவது நடந்தால் உங்களுக்குத் தெரிவிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். நான் இப்போது ஒற்றையாக மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்று பதிலடி கொடுத்து இருக்கிறார்.