தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அண்மையில் தெரிவித்த கருத்துக்குக் கண்டனம் தெரி வித்துள்ளார் நடிகர் உதயா.
தமிழ்த் திரைப்படத் தயாரிப் பாளர் சங்கத் தேர்தலில் விஷா லுக்குப் பல வகையிலும் தோள் கொடுத்த உதயா தற்போது அவ ருக்கு எதிராக அறிக்கை வெளி யிட்டிருப்பது திரையுலகத்தில் விவாதப் பொருளாகி உள்ளது.
சரி, இருவருக்கும் இடையே என்னதான் பிரச்சினை?
உதயா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'உத்தரவு மகாராஜா' என்ற படத்தை வெளியிட போது மான திரையரங்குகள் கிடைக்க வில்லை. இதுகுறித்துத் தயாரிப் பாளர் சங்கத்தில் முறையிட்டும் பலன் இல்லையென அவர் சாடியிருந்தார்.
இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த விஷால், அந்தப் படம் நன்றாக இல்லை என்பதால் ஓட வில்லை என்றும், 4 பேர் மட்டுமே அப்படத்தைப் பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள உதயா தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பான பதவியை வகித்த விஷால் என்ன சாதித்தார் என்பது அனைவருக்கும் தெரி யும் என நையாண்டியாகக் கூறி உள்ளார்.
"நான் அனைவருடைய கருத் துகள், விமர்சனங்கள் நேர்மறை யாக இருந்தாலும் சரி, எதிர் மறையாக இருந்தாலும் சரி, அவற்றை மதிக்கிறேன்; பாராட்டு கிறேன். விமர்சனங்களில் இருக் கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன்.
"அதேசமயம் கண்மூடித்தன மான விமர்சனங்களை ஏற்ப தில்லை. துரதிர்ஷ்டவசமாக எனது படம் குறித்த உங்கள் (விஷால்) விமர்சனமும் அவ்வாறானதே. ஏனெனில் நீங்கள் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை என உறுதியாக நம்புகிறேன்.
"என் படத்தைத் திரையிட போதுமான திரையரங்குகள் கிடைக்காது அவதியுற்றது உங்க ளுக்குத் தெரியும். ஏனெனில் அந்தப் பேரிடருக்கு வழி வகுத்ததே நீங்கள்தான்," என தமது அறிக் கையில் கூறியுள்ளார் உதயா.
'உத்தரவு மகாராஜா' படத் துக்குத் திரைத்துறையினர், ரசிகர் கள், ஊடகங்களிடமிருந்து நேர் மையான விமர்சனங்கள் கிடைத்தி ருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அந்த விமர்சனங்கள் தமக்குத் திருப்தி அளித்துள்ளதாகக் கூறி உள்ளார்.
தனது படம் சராசரிக்கும் அதி கமான வியாபாரத்தைத் தமக்குத் தந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இதன்மூலம் மக்கள் அதை ரசித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகி உள்ளதாகவும் குறிப் பிட்டுள்ளார்.
"ஒரு திரைப்படத்தை விமர் சனம் செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் விமர்சனங்கள் தனி நபர் தாக்குதலாகவோ அல் லது பிற நோக்கங்களுக்காகவோ இருக்கக் கூடாது.
"ஒரு பொறுப்புள்ள உயர் பதவியில் இருந்த நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக் கும் தெரியும். காலம் அனைத்தை யும் நிரூபித்துக் காட்டும். சொல்வ தற்கு வேறொன்றும் இல்லை. 'விதைத்ததை மட்டுமே அறுக்க முடியும்' என்ற எளிய பிரபஞ்ச விதியை நான் நம்புகிறேன்," என்று உதயா கூறியுள்ளார்.