தனு‌ஷின் 17 ஆண்டுகாலப் பயணம்

தனு‌ஷின் 17 ஆண்டுகாலப் பயணம்

1 mins read
fd7cd8db-7ce3-4525-967f-961c39065939
-

தனுஷ் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி 17 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் திரையுலகில் இத்தனை ஆண்டுகள் செலவிட்டதைத் தம்மால் நம்பவே முடியவில்லை என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"எதுவும் தெரியாத சின்னப் பையனாக இருந்த எனக்கு ரசிகர்களாகிய நீங்கள் இதயத்தில் இடம் கொடுத்திருக்கிறீர்கள். சாதாரண நடிகனாக முடியாது என்று நினைத்த என்னை ஒரு நட்சத்திரமாக மாற்றி இருக்கிறீர்கள்.

"எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது. என்னுடைய வெற்றி, தோல்வி எல்லாவற்றிலும் நீங்கள் உடன் இருந்திருக்கிறீர்கள். இந்த அன்பு எப்போதும் வேண்டும். அன்பைப் பரவச் செய்யுங்கள், அதுமட்டுமே உலகத்தை உருவாக்கும்," என்று கூறியுள்ளார் தனுஷ்.