'களவாணி-2' படத்தை வெளியிட விடாமல் சிலர் தமக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக இயக்குநர் சற்குணம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது கோடம்பாக்க வட்டாரங்களில் பரபரப்பை ஏற்ப
டுத்தி உள்ளது. புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சற்குணம், 'களவாணி-2' படத்தை
தாமே தயாரித்து இயக்கியுள்ளதாகவும், இம்மாதம் அதைத் திரையிட திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிட்
டார். நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ள படம் இது. பட வெளியீடு தொடர்பாக முன்பே விளம்பரங்கள் வெளியாகின. இந்நிலையில் இப்படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. "தற்போது அத்தடை நீங்கியுள்ளதால் பட வெளியீட்டுக்குத் தயாரானோம். ஆனால், இந்தப் படம் எப்படி வெளி யாகிறது எனப் பார்த்துவிடுவோம் என்று தொலைபேசியில் சிலர் மிரட்டுகிறார்கள். சில அடியாட்கள் நேரில் வந்து கொலை மிரட்டலும் விடுக்கிறார்கள்," என்று இயக்குநர் சற்குணம் தெரிவித்துள்ளார்.

