குறும்படங்கள் மூலம் கோடம் பாக்கத்தில் இயக்குநராக அவ தாரம் எடுப்பவர்களிடம் அடுத் தடுத்து படங்களை உருவாக்கு வதற்கான திரைக்கதை ஆளுமை இல்லை என்கிறார் இயக்குநர் சலங்கை துரை.
இதனால்தான் அத்தகையவர் களுக்குத் தொடர்ந்து படம் இயக்க வாய்ப்புக் கிடைப்பதில்லை என்றும் கூறுகிறார்.
கரண், வடிவேலு கூட்டணி யில் வெளிவந்த 'காத்தவராயன்' என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்தவர் சலங்கை துரை. தற்போது 'இ.பி.கோ. 302' என்ற படத்தை இயக்கியுள்ளார். இது குற்றச் சம்பவங்களும் திகிலும் நிறைந்த படமாம்.
இதற்கு முன்பு நகைச்சுவை, குடும்ப உணர்வுகளில் மட்டுமே கவனம் செலுத்தியவர் இப்போது திகில் கதையைக் கையாண்டுள்ள தாகச் சொல்கிறார்.
அடையாளம் தெரியாத ஒரு சடலத்தைப் போலிசார் கைப்பற்று கிறார்கள். அந்த நபரைக் கொன் றது யார்? இறந்து கிடப்பது யார்? ஆகியவற்றைப் போலிசார் எப்படி துப்புத் துலக்குகிறார்கள் என்பதுதான் கதையாம். கொலைக்கான காரணம் தெரிய வரும்போது பெரிய திருப்பங்கள் ஏற்படுமாம்.
"கொலைக்கான காரணம் ரசி கர்களுக்குப் புதிதாக இருக் கும். கள்ளக்காதலுக்காக, சொத் துகளுக்காக தினமும் ஏராள மான கொலைகள் நிகழ்கின்றன. ஆனால் இந்தப் படத்தில் கொலைக்கான பின்னணியை யாராலும் கற்பனை செய்ய முடியாது.
"அதுமட்டுமல்ல, நாகரிகம் வளர்ந்துள்ள நிலையிலும் நம் சமூகத்தில் சாதிப் பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் சாதியை ஒழிக்க முடியவில்லை.
"ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. வாழ்க்கையில் எதுவெல்லாம் தேவையில்லையோ, அதை நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டி ருக்கிறோம். எவையெல்லாம் தேவையோ அதைச் செய்ய மறந்து விடுகிறோம். இவற்றைச் சுட்டிக்காட்டி, சமூகத்துக்குத் தேவையான சில கருத்துகளை அழுத்தமாகச் சொல்லியிருக்கி றோம்," என்கிறார் இயக்குநர் சலங்கை துரை.

