சுடச் சுடச் செய்திகள்

‘இணையத் தொடரும் முக்கியம்’

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார் இளம் நாயகி சனம் ‌ஷெட்டி. இவரது நடிப்பில் அடுத்து ‘டிக்கெட்’ என்ற படம் வெளியாகிறது. 

இந்நிலையில் இணையத் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். திரைப்பட வாய்ப் புகளே போதுமான அளவில் இருக்கும் வேளையில், எதற் காக இணையத் தொடர் வேறு என்று கேட்டால், “நான் சரியான திசையில் தான் சென்று கொண்டிருக் கிறேன்,” என்கிறார் சன‌ம்.

“தற்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகி வருகி றது. அதுமட்டுமல்ல, ஒரு நடிகையாக இணையத் தொடருக்கும் திரைப்படத்துக்கும் இடையே பெரிய வித்தி யாசம் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை.

“இரண்டுக்கும் ஒரேவிதமான உழைப் பைத்தான் கொடுக்க வேண்டி இருக்கிறது. அவை வெளியாகும் தளங்கள்தான் வெவ்வேறாக உள்ளன,” என்கிறார் சனம் ‌ஷெட்டி.

தமிழில் இணையத் தொடர்கள் மிகக் குறைவாகவே வெளிவருவது இவருக்கு வருத்தம் அளிக்கிறதாம்.

எனினும் இணையத் தொடர்களுக்கு ஏராளமான பார்வையாளர்கள் இருப்பது திருப்தி அளிப்பதாகச் சொல்கிறார்.

“பார்வையாளர்கள் அதிகமாக இருப்பது தெரிந்தும் அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் போதுமான தொடர்கள் வெளியாவ தில்லை. இதே நிலை தொடர்ந்தால் வேறு மொழி களில் வெளிவரும் இணையத் தொடர்களைக் கவனிக்கவேண்டிய கட்டாயம் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்படும்,” என்று எச்சரிக்கிறார் சனம் ‌ஷெட்டி.

இவர் ‘அம்புலி’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, ‘கதம் கதம்’, ‘சவாரி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இயக்குநர் மி‌ஷ்கினின் உதவியாளர் அர்ஜுன் கலைவன் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

“நல்ல நடிப்பை தமிழ் ரசிகர்கள் வரவேற்பார்கள். என்னிடம் திறமை இருப்பதால் நிச்சயம் என்னால் சாதிக்கமுடியும். என் திறமையை வெளிப்படுத்தக் கூடிய நல்ல வாய்ப்புகள் அமைந்தால் மகிழ்ச்சி. அந்த வாய்ப்புகளுக்காக பொறுமையுடன் காத்தி ருப்பேன்,” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் இளம் நாயகி சனம் ஷெட்டி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon