சமீரா ரெட்டி: பெண்கள் போகப் பொருள் அல்ல

1 mins read
f4bab747-d1df-4f10-883f-8bbd4762e8d5
சமீரா ரெட்டி -

திரையுலகில் பல்வேறு வகையில் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாகச் சொல்கிறார் நடிகை சமீரா ரெட்டி.

திருமணத்துக்குப் பின் திரையுலகை விட்டு விலகிய இவருக்கு, ஏற்கெனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் மீண்டும் தாய்மை அடைந்துள்ளார்.

இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் தங்களது விருப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் என்று சிலர் தம்மை வற்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"இதனால்தான் நான் திரையுலகை விட்டு வேகமாக வெளியேற நேர்ந்தது. இந்நிலை எப்போது மாறுகிறதோ அப்போதுதான் சினிமாவுக்கு நல்ல தருணம் துவங்கும்.

"தற்போது அந்த மாற்றம் ஏற்படத் தொடங்கி இருந்தாலும் அது குழந்தை நடப்பது போல் மெதுவாக நடக்கிறது. நடிகைகளை போகப் பொருளாக பார்ப்பதை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக்கொள்ள வேண் டும். அவர்கள் மாறுவது அவசியம்," என்று கூறுகிறார் சமீரா ரெட்டி.