நல்ல நடிப்பால் அசத்திய நந்திதா

நல்ல நடிப்பால் அசத்திய நந்திதா

1 mins read
928b03e5-3873-4218-a735-643e32d066d6
நந்திதா -

'செவன்' என்ற தலைப்பில் உருவாகும் புதுப்படத்தில் அசத்தலான நடிப்பை வழங்கி உள்ளாராம் நந்திதா. இவரது நடிப்பை ஒட்டுமொத்த படக் குழுவும் பாராட்டுகிறது.

"காணாமல் போகும் ஒரு நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஒரு கட்டத்தில் போலிசாரின் விசாரணை கற்பனைக்கு எட்டாத பரிமாணங்களைத் தொடுகிறது.

"குற்றச் சம்பவங்களும் திகிலும் நிறைந்த இத்தகைய கதையில் கதைக்கு ஏற்ப நடித்திருப்பதில் மகிழ்ச்சி. இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறேன்," என்று சொல்லும் நந்திதா, தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என சுமார் பத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

ஆனாலும் இதுகுறித்து தாம் அலட்டிக்கொள்வதில்லை என்கிறார். 'செவன்' படத்தில் இவரைத் தவிர ரெஜினா, திரிதா சவுத்ரி, அதிதி ஆரி, பூஜிதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.