நடிகைகளுக்குப் பிடித்த விஷயம்

நான்கு நடிகைகள் தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை ஊடகங் களுடன் பகிர்ந்துகொண்டுள்ளனர். 

‘பேட்ட’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன் மும்பையில் வசிக்கிறார். அவரது பூர்வீக வீடு கேரள மாநிலத்தில் உள்ள பையனூர் பகுதியில் இருக்கிறதாம். அங்கு சென்றாலே மனதில் உள்ள குழப்பங்கள் எல்லாம் பறந்தோடி விடுமாம்.

“எப்போது பையனூர் சென்றாலும் அங்கு முல்லைப்பூ வாசம் பலமாக வீசும். என் அம்மாவுக்குப் பிடித்த பூ அது. அதனாலேயே வீட்டில் முல்லைப்பூ தோட்டம் போட்டிருந்தோம். தினமும் பூ கட்டி  தலையில் வைத்துக்கொள்வார் அம்மா. 

“வீட்டின் பூசை அறையிலும் முல்லைப்பூதான் இடம்பெறும். சந்தேகமே வேண்டாம். இந்த உலகில் எனக்குப் பிடித்தமான விஷயங்களின் பட்டியலில் அந்த வீடும் முல்லைப்பூவும் நிச்சயம் உள்ளன,” என்கிறார் மாளவிகா மோகனன்.

*** காஜலுக்குப் பிடித்தமான ஒன்று அண்மையில் வீடு தேடி வந்துள்ளது. வேறொன்றுமில்லை, அது அவரை வைத்து வரையப்பட்டுள்ள ஒரு கேலிச்  சித்திரம். ஹாலிவுட் பிரபலங்களுக்கு                 பிடித்தமான சான்ட்விச்சுகளோடு பிரபலங்களை இணைத்து ஜாலி கேலிச்சித்திரமாக வரைந்து வெளியிடுகிறது ஒரு தனியார் நிறுவனம். 

அந்த வகையில் காஜலையும் கேலிச்சித்திர மாகத் தீட்டியுள்ளதாம். வரைந்த கையோடு அதைக் காஜலுக்கும் அனுப்பி வைக்க, அவரது வீட்டின் வரவேற்பரையை அந்தச் சித்திரம்தான் அலங்க   ரித்துக் கொண்டிருக்கிறது.

*** அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ராதிகா ஆப்தே அணிந்து வந்த சிறப்பு உடை  பார்வையாளர்களின் கவ னத்தை வெகுவாக ஈர்த்தது. பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் கைவண்ணத்   தில் உருவான உடை அது. 

ராதிகா ஆப்தே கேட்டுக்கொண்டதால் கூடுதலாக மெனக்கெட்டு இந்த அழகான உடையை உருவாக்கினாராம். இது என் உள்ளம் கவர்ந்த அழகுப் பரிசு என்று சமூக வலைத்தளத்தில் மணீஷை மெச்சிக் கொண்டுள்ளார் ராதிகா.

*** ஜெயலலிதாவின் சாயலில் இருப்பதாக மஞ்சிமா மோகனிடம் சொன்னால் போதும், முகத் தில் அப்படியொரு மலர்ச்சி பூக்கிறது. 

“உங்கள் முகம் ஜெயலலிதா கதாபாத்திரத்துக்கு நன்றாகப் பொருந்துமே என்று பலர் சொன்ன பிறகுதான் எனக்கும் அப்படித் தோன்றியது. கௌதம் மேனன் சார் கூட  இணையத் தொடரில் ஜெயலலிதா மேடம் கதா பாத்திரத்தில் நடிக்கக் கேட்டிருந்தார். 

“ஆனால் சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. எதிர்காலத்தில் அப்படியொரு வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்,” என்கிறார் மஞ்சிமா.2019-05-15 06:10:00 +0800