‘எம்மதமும் எனக்கு சம்மதம்’

குறிப்பிட்ட ஒரு கடவுளின் மீது அதீத பக்தி என்பதெல்லாம் கிடையாது என்கிறார் நடிகை பிரியா ஆனந்த். 

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் முடிந்தவரை அனைத்து மக்களின் நம்பிக்கைகளையும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். அண்மையில் பிரியா மதம் மாறிவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், அது பொய்யான தகவல் என்கிறார்.

“அடிப்படையில் நான் இந்து. அதற்காக இந்துக் கடவுளை மட்டுமே கும்பிடுபவள் அல்ல. எம்மதமும் சம்மதம்தான். தேவாலயம், தர்காவுக்கும் செல்வேன். பிடித்தமான அனைத்துக் கோவில்களுக்கும் சென்று வருகிறேன்,” என்கிறார் பிரியா.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘இரண்டாம் உலகப் போரின் கடைசித் துண்டு’ படக்குழுவினர்.

20 May 2019

‘ஒரு மனிதனின் கதைக்குள் பல கதைகள்’