விடுதிகள் குறித்து விவரிக்கிறது மயூரன்

ஓர் அருமையான கதைக்களத்தை விறுவிறுப்பான திரைக்கதை எனும் தேன் தடவி ரசனையோடு உருவாக்கி இருக்கிறேன் என்கி றார் நந்தன் சுப்பராயன். 

இவர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இவர் இயக்குநராக அறிமுகமாகும் ‘மயூரன்’ படம் விரைவில் திரை காண உள்ளது. 

இதில் நடிக்கும் பெரும்பாலா  னவர்கள் கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்தவர்களாம். வேலன் ராமமூர்த்தி, ஆனந்தசாமி, அமுத வாணன், அஸ்மிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதென்ன ‘மயூரன்’?

“மயூரன் என்றால் விரைந்து உன்னைத் தாக்க வருபவன். வெற்றி புனைபவன் என்று பொருள். சாதாரண குடும்பத்தின் கனவுகளைச் சுமந்துகொண்டு விடுதியில் தங்கி, பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாண வன் ஒருநாள் நள்ளிரவில் மாய மாகிறான். அவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது மேலும் பல மர்ம முடிச்சுகள் உருவாகின்றன. முடி வில் என்ன ஆகிறது என்பது ரகசியம் என்கிறார்,” நந்தன் சுப்பராயன்.

கல்லூரி விடுதி என்பது வாழ்க்   கையைச் செதுக்கும் பட்டறைக் களம் என்பதைக் கச்சிதமாகக் காட்சிப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர்.

“சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும்.. வைரக்கற்  கள் கண்ணிமைக்கும் வினாடிக  ளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். 

“அங்கு ஏற்படும் பிரச்சினைகள் ஒரு தனிமனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்துப் போடுகி றது என்பதைப் பற்றித்தான் படம் பேசுகிறது,” என்கிறார் நந்தன் சுப்பராயன்.