விஷால் படத்துக்கு எதிராக புகார் எழுப்பி பின்வாங்கிய பார்த்திபன்

அண்மையில் விஷால் நடிப்பில் வெளி யான ‘அயோக்கியா’ படத்தின் கதை தான் ஏற்கெனவே நடித்து வெளியான ‘உள்ளே வெளியே’ படத்தின் சாயலில் இருப்பதாக நடிகர் பார்த்திபன் தெரி வித்திருப்பது கோடம்பாக்கத்தில் சல சலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் பார்த்திபன் சொல் வது சரியல்ல என்று ‘அயோக்கியா’ இயக்குநர் வெங்கட் மோகன் கூறியுள்ளார்.

“பார்த்திபன் தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்து. அவர் குறிப்பிட்ட படத்தின் சாயல்  இந்தக் கதையில் இருந்திருக்கலாம். ஆனால் இது நான் எழுதிய கதை அல்ல. ஒரு தெலுங்குப் படத்துக்காக வக்தங்கம் வம்சிதான் எழுதி உள்ளார்,” என்கிறார் வெங்கட் மோகன். 

கதையின் முடிவை மட்டுமே தாம் மாற்றியதாகவும், அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என் றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே தமது டுவிட்டர் பதிவில் பார்த்திபன் தெரிவித்த கருத்து விஷால் ரசிகர்களைச் சூடாக்கியது. 

“எனது படத்தைத் திருடி தெலுங் கில் படமாக்கி அதை அடுத்து தமிழில் எடுக்கும்போது என்னையே வில்ல னாக்கியது அயோக்கியத்தனம்,” என்று குறிப்பிட்டிருந்தார் பார்த்திபன். 

எனினும் தமது அடுத்தடுத்த பதிவுகளில் விஷாலுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், பட விளம்பரத்துக்காகவே இவ்வாறு செய்ததாகவும்  அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரி யாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் பார்த்திபன் விஷா லுக்கு எதிரான அணியில் இணைவ தற்கு வாய்ப்பு உள்ளதாக கோடம்பாக்க   வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.