வாய்ப்புக் கிடைத்தால் தமிழில் நடிப்பேன்

தமிழில் நல்ல வாய்ப்புகள் அமை யாததால்தான் நடிக்கவில்லை என்று கூறுகிறார் நடிகா அமலா. 

எனினும் நல்ல தமிழ்ப் படங்களைப் பார்க்கத் தவறுவதில்லை என்றும், நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் தமிழில் நடிப்பது உறுதி என்றும் கூறுகிறார். 

தமிழகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளைத் தமிழ் சினிமாவின்  புதிய நுணுக்கங்களையெல்லாம் அணுக்கமாகக் கவனித்து வருவதாகக் குறிப்பிடுபவர், ஆண்டுக்கு ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம். 

“தெலுங்கு, இந்தி, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. மற்றபடி அவ்வப்போது சென்னை வந்து செல்கிறேன். சமந்தா நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தைப் பார்க்க விரும்புகிறேன். கூடிய சீக்கிரம் பார்த்து விடுவேன் என்கிறார் அன்பு மாமியார் அமலா.