‘நட்புனா என்னானு தெரியுமா’

தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் பிரபலமான கவின் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’. இதில் இவருடன் இணைந்து ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சிவா அரவிந்து இயக்கி உள்ளார். “இது முழுநீள நகைச்சுவைப் படம். சிறு வயது முதலே நெருக்கமான நண்பர்களாக இருக்கும் மூன்று இளையர்கள் ஒரே பெண்ணைக் காதலிக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களது நட்பு மற்றும் தொழிலில் ஏற்படும் அடுத்தக்கட்ட நகர்வுகளை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறோம்.

இதில் மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், இயக்குநர் அருண்ராஜா காமராஜா ஆகியோரும் உள்ளனர். தரண் இசையில் உருவான பாடல்கள் ரசிகர்களை நிச்சயம் கவரும். பட நாயகன் கவின், நான் எதிர்பார்த்ததை விட சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார். நாயகி ரம்யா நம்பீசன் ஏற்கெனவே பல படங்களில் திறமையை நிரூபித்தவர். இதிலும் அசத்தலாக நடித்துள்ளார்,” என்கிறார் இயக்குநர் சிவா.